‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ் குறித்து நடிகை ஜெயசித்ரா புகார்... பதிலடி கொடுத்த விஷால் தரப்பு!

மகன் பட ரிலீஸ் விவகாரம் தொடர்பாக நடிகை ஜெயசித்ரா தெரிவித்த கருத்துக்கு விஷால் தரப்பினர் பதிலடி தந்தனர்.

சென்னை: ஆண்டனி பட விழாவில் மகன் பட ரிலீஸ் பிரச்சினை குறித்து புகார் கூறிய நடிகை ஜெயசித்ராவுக்கு, விஷால் தரப்பு மேடையிலேயே பதிலடி தந்தது.

ஆண்டனி புரோடக்ஷன்ஸ் சார்பில் வெப்பம் ராஜா மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆண்டனி' . இந்தியாவின் முதல் கிளாஸ்டோஃபோபிக் வகை படமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளர் குட்டி குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் லால் மற்றும் ரேகா ஆகியோரை தவிர, இந்த படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள்.

இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார். விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஜெயசித்ரா, தமது மகனின் பட ரிலீஸ் தள்ளிப்போவது குறித்து கவலை தெரிவித்தார்.

இளம் இசையமைப்பாளர்:

இளம் இசையமைப்பாளர்:

இது தொடர்பாக விழாவில் அவர் பேசியதாவது, " இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஷிவாத்மிகாவை பாராட்டுகிறேன். பூமிக்கு அடியில் நடக்கும் கதை இது. மிகவும் வித்தியாசமான சப்ஜெக்ட்.

சிறுபட்ஜெட் படங்கள்:

சிறுபட்ஜெட் படங்கள்:

இதுபோன்ற முயற்சிகளை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் ரிலீஸ் சமயத்தில் சிறு பட்ஜெட் படங்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனது மகனின் படத்துக்குக்கூட பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

டிக்கெட் விற்பனை:

டிக்கெட் விற்பனை:

இரண்டு, மூன்று தேதிகள் தள்ளிப்போய் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட போது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்பனையானது. ஆனால் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போவதால், அந்த படத்தை யார் நம்புவார்கள்.

கோரிக்கை:

கோரிக்கை:

தயாரிப்பாளர் சங்கம் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும். இதே நிலை நீடித்தால் சினிமா தொழில் செய்வதே கடினமாக மாறிவிடும். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் நடிகர் விஷால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வழிவகை செய்ய வேண்டும்" என இவ்வாறு அவர் பேசினார்.

தங்கதுரையின் பதில்:

தங்கதுரையின் பதில்:

ஜெயசித்ராவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மேடையில் அமர்ந்திருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகி தங்கதுரை உடனடியாக தனது உரையில் விளக்கம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, "ஆண்டனி படத்தின் டிரெய்லர் மிரட்டலாக இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.

மூன்று தேதிகள்:

மூன்று தேதிகள்:

ஜெயசித்ரா அவர்கள் பேசும் போது தமது மகனின் படம் ரீலிசாவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் காரணம் அல்ல. ஏற்கனவே மூன்று தேதிகள் அவர்களுக்கு கொடுத்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை.

விஷாலுக்குப் பாராட்டு:

விஷாலுக்குப் பாராட்டு:

நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர் சரியாக எங்களை இயக்குகிறார். ரிலீஸ் கமிட்டியில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் வெப்பம் ராஜாவும் உறுப்பினராக இருக்கிறார். வாரத்துக்கு நான்கு படங்கள் வருகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்குக்கூட தியேட்டர் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். தற்போது கட்டப்பஞ்சாயத்துக்கள் நடப்பதில்லை.

தீர்வு கிடைக்கும்:

தீர்வு கிடைக்கும்:

நாங்களே சிபாரிசு செய்து, கெஞ்சி தியேட்டர்களை பிடித்து தருகிறோம். நடிகர் விஷால் விஜயகாந்தில் பாதி. அவர் சிறப்பாக தான் செயல்படுகிறார். ஆனால் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் காலரை பிடித்து இழுத்தால், அவர் என்ன செய்வார். விஷாலை செயலாற்றவிடுங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும்" என இவ்வாறு அவர் பேசினார்.

அமலாபால் படம்:

அமலாபால் படம்:

நடிகை ஜெயசித்ராவின் மகன் அமரேஷ், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. கடந்த 11ம் தேதி வெள்ளிக்கிழமை படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிபோனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X