ஹூட்ஹூட் நிவாரணம்: விஷால் 15 லட்சம்.. சூர்யா, கார்த்தி, ஞானவேல்ராஜா இணைந்து 50 லட்சம்!
ஆந்திர கடலோரப் பகுதிகளை புரட்டிப் போட்ட ஹூட் ஹூட் புயல், அந்த மக்களின் வாழ்க்கையையே சீரழித்துள்ளது.
இதற்கு நிவாரண நிதி பல்வேறு தரப்பிலிருந்தும் குவிய ஆரம்பித்துள்ளது. ஆந்திரத்தில் அடித்த புயல்தானே என்று தமிழ் சினிமாக்காரர்கள் சும்மா இருந்துவிடவில்லை. நிவாரண நிதியை அள்ளி வழங்கியுள்ளனர்.

நடிகர் விஷால் தன் பங்காக ரூ 15 லட்சத்தை ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
சூர்யா ரூ 25 லட்சத்தையும், அவர் தம்பி கார்த்தி ரூ 12.5 லட்சமும், உறவினரும் தயாரிப்பாளருமான கே ஈ ஞானவேல் ராஜா ரூ 12.5 லட்சத்தையும் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

இந்தத் தொகைக்கான காசோலைகளை இன்று ஆந்திர முதல்வரின் புயல் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.
அனைத்து தெலுங்கு நடிகர்களும் ஏற்கெனவே பல கோடி ரூபாயை இந்த நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











