3 பேருக்காவது கடும் தண்டனை கொடுத்தால் தான் கந்துவட்டிக்காரர்களுக்கு பயம் வரும்: விஷால்

By Siva

திருநெல்வேலி: குறைந்தது 3 பேருக்காவது கடுமையான தண்டனை கொடுத்தால் தான் திரையுலகில் கந்துவட்டிக்கு கொடுப்பவர்களுக்கு பயம் வரும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

கந்து வட்டி பிரச்சனையால் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தன் முடிவுக்கு காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்தார் அசோக்.

இது குறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அன்புச்செழியன்

அன்புச்செழியன்

எவ்வளவு டார்ச்சர் செய்திருந்தால் அசோக் குமார் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்திருப்பார். அவரின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். கந்து வட்டி பிரச்சனையை தீர்க்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்டனை

தண்டனை

சினிமா மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் கந்துவட்டி பிரச்சனை உள்ளது. ஆனால் சினிமா துறையில் கந்துவட்டி பிரச்சனை அதிகம் உள்ளது. குறைந்தது 3 பேருக்காவது கடுமையான தண்டனை கொடுத்தால் தான் கந்துவட்டிக்காரர்களுக்கு பயம் வரும்.

கலை நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சி

ரூ. 30 கோடியில் நடிகர் சங்க கட்டடம் கட்ட சென்னையில் கலை நிகழ்ச்சி நடத்தினோம். அடுத்தாக ஜனவரி மாதம் 5, 6 தேதிகளில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்துகிறோம்.

கமல்

கமல்

மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்பட 250 நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்க கட்டடம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றார் விஷால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X