மதகஜராஜா ரிலீஸ்.. மனம் திறந்து ஓபனாக பேசிய விஷால்.. கியாரண்டியும் கொடுத்திருக்காரு

சென்னை: அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷால். அதற்கு பிறகு செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். ஆனால் தொடர்ந்து அவரால் அந்த வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. இடையில் சில படங்கள் மட்டுமே அவருக்கு கை கொடுத்தன. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ரத்னம் ஆகிய படங்களில் மார்க் ஆண்டனி மெகா ஹிட்டானது.

செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். நடிகராக அறிமுகமான பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர்; நல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். அதன்படியே அவர் நடித்த தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதில் விஷாலின் ஆக்‌ஷன் காட்சிகள் பலரையும் ரசிக்க வைத்தது. இதனால் பெரும் ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டது.

madha kaja raja vishal

சறுக்கிய விஷால்: ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் அவருக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு ஹிட்டுக்காக ஏங்கிய விஷால் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் படம் பெரிதாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு எந்தப் படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதற்கிடையே நடிகர் சங்க விவகாரத்தில் சர்ச்சையையும், சரத்குமாருடன் மோதலும் எழுந்தது அவருக்கு.

வரலட்சுமியுடன் பிரிவு?: மேலும் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், விஷாலும் காதலித்து வந்ததாகவும்; சரத்குமாருடன் வந்த மோதலால் அந்தக் காதலில் இருந்து விஷால் வெளியேறிவிட்டதாகவும் ஒரு தகவல் ரொம்ப நாட்களாகவே ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வரலட்சுமி நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விஷாலோ இன்னமும் சிங்கிளாக இருந்து தனது கரியரில் தீவிர கவனத்தை செலுத்திவருகிறார்.

மார்க் ஆண்டனி மெகா ஹிட்: அந்தவகையில் அவர் கடைசியாக மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களில் நடித்தார். அவற்றில் மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். எதிர்பார்ப்பில்லாமல் வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக நூறு கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்ததாக அவர் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துவருகிறார்.

madha kaja raja vishal

மதகஜராஜா: இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் மத கஜ ராஜா படத்தில் நடித்தார் விஷால். இதில் அவருடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் படமானது ரிலீஸாகவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது. இந்நிலையில் அதுகுறித்து பேசியிருக்கும் விஷால், "எனது திரை பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த குடும்ப என்டெர்டெயின்மென்ட் படமான மதகஜராஜா 12 ஆண்டுகள் கழித்து பொங்கலுக்கு ரிலீஸாகிறது.நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X