twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்க தேர்தல் : விஷால், குஷ்பு வேட்புமனுத் தாக்கல்... நாசர், கார்த்தி மிஸ்ஸிங்!

    நடிகர் சங்க தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தது பாண்டவர் அணி

    |

    Recommended Video

    Nadigar Sangam: சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி ரூ.1 கோடி, விஷால் ரூ. 25 லட்சம்- வீடியோ

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.

    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தலைவர், துணை தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்பட 20க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு இத்தேர்தல் நடக்கிறது.

    Vishal team files nomination

    தேர்தலில் தற்போது பதவியில் உள்ள பாண்டவர் அணியினரும், அவர்களை எதிர்த்து கே.பாக்யராஜ், ஐசரி கணேசன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தற்போது பதவியில் இருக்கும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் வேட்புமனு செய்தார். அவருடன், நடிகைகள் குஷ்பு, லதா உள்ளிட்டோரும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு செய்தனர்.

    Vishal team files nomination

    என்னா ஒரு 'டகால்டி'.. போஸ்டர் விவகாரத்தில் சடாரென அந்தர்பல்டி அடித்த சந்தானம்! என்னா ஒரு 'டகால்டி'.. போஸ்டர் விவகாரத்தில் சடாரென அந்தர்பல்டி அடித்த சந்தானம்!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ஒருபோதும் தான் பின்வாங்கப் போவதில்லை என்றார். மேலும், சங்கக் கட்டட திறப்பு விழா மற்றும் மரியாதை நிமித்தமாக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்க உள்ளதாக அவர் கூறினார்.

    பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் நாசர், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. திங்கட்கிழமை தான் கடைசி நாள் என்பதால், நாளை அல்லது நாளை மறுதினம் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிரணியினரும் நாளை மனு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Actor Vishal and some of his team mets filed their nomination for contesting in south Indian artists association election, which will be held on 23rd of this month.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X