பாலிவுட்டில் அறிமுகமாகும் அடுத்த தமிழ் ஹீரோ .. கூடிய விரைவில் அறிவிப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால்.
இதுமட்டுமின்றி இயக்குனராகவும் துப்பறிவாளன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளார் விஷால்.
பாலிவுட்டிலும் விஷால் அறிமுகமாகவுள்ளதாக சமீப காலமாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

நீண்ட போராட்டம்
நீண்ட போராட்டத்திற்கு M.S. ஆனந்தன் இயக்கத்தில் விஷால், சிரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது சக்ரா திரைப்படம். முன்னதாக விஷால் நடிப்பில் வெளியான இரும்பு திரை பாணியில் இந்த படமும் இருந்தது.

ஆர்யா - விஷால்
பாலாவின் அவன் - இவன் படத்தில் ஆர்யா - விஷால் முன்னதாக இணைந்து நடித்தனர். இதைத்தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் ஆனந்த் ஷங்கர் இயக்கும் எனிமி படத்தில் இணைந்துள்ளது. சமீபத்தில் எனிமி படத்தின் படப்பிடிப்பு பணிகள் துபாயில் நடந்தது. இதையடுத்து து.ப. சரவணன் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவுள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகம்
இதைத்தொடர்ந்து விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் மிஷ்கின் உடனான சர்ச்சை காரணமாக விஷாலே படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இது முடிந்தவுடன் பாலிவுட்டில் விஷால் அறிமுகமாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை நடிகர் விஷால் மார்ச் மாத இறுதிக்குள் அறிவிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018ம் ஆண்டு விஷால் - அர்ஜுன் கூட்டணியில் வெளியான இரும்புத்திரை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் விஷால் வில்லனாக நடிக்கவுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











