அடுத்த பிரச்சனைக்கு அடிபோடும் விஷால்: அப்படி படத்தை ஓட வைக்கணுமா?

By Siva

Recommended Video

சர்க்கார் அடுத்து விஷால் அயோக்யா போஸ்டருக்கு கடும் கண்டனம்- வீடியோ

சென்னை: விஷாலின் அயோக்யா போஸ்டரை பற்றி தான் இப்படி பேச்சு கிளம்பியுள்ளது.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் அயோக்யா. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் கையில் பீர் பாட்டில் உள்ளது.

இந்த காரணத்தால் போஸ்டர் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

விஷால்

விஷால்

கையில் ஒரு சிகரெட்டை வைத்தபடி போஸ் கொடுத்தாலே பெரிய பிரச்சனை வரும் என்று தெரிந்தும் விஷால் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார். வேண்டும் என்றே மக்களை தூண்டிவிட்டு தன்னை விமர்சிக்க வைத்தது போன்று உள்ளது அவரின் செயல். அந்த காரியத்தில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டார்.

சர்ச்சை

சர்ச்சை

படங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வைப்பது, ஹீரோவை தம்மடிக்க அல்லது மது அருந்த வைப்பது எல்லாம் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அத்தகைய விமர்சனங்கள், கண்டனங்கள் படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து விடுகிறது. படத்திற்கு எழும் கண்டனங்களால் அதற்கு பட்டி தொட்டி எல்லாம் விளம்பரம் கிடைத்துவிடுகிறது.

அயோக்யா

அயோக்யா

கையில் பீர் பாட்டிலை வைத்திருந்தால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் இப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அது சரி, இலவச விளம்பரம் பெற வேண்டும் என்ற ஆசை விஷாலுக்கு மட்டும் இருக்காதா என்ன. தப்பில்ல தப்பில்ல.

விமர்சனம்

விமர்சனம்

இந்த அளவுக்கு இறங்கி வந்து இலவச விளம்பரம் தேடி தான் படத்தை ஓட வைக்க வேண்டுமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழ் ராக்கர்ஸை அடக்கத் தவறிய விஷயத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் விஷால். இந்நிலையில் இந்த இலவச விளம்பர முயற்சி வேறு.

பணம்

பணம்

அயோக்யா படத்தில் பணத்திற்காக எதையும் செய்பவராக நடித்துள்ளார் விஷால். அவர் போலீஸ் அதிகாரியானது கூட பணத்திற்காக தானே தவிர ஆசை எல்லாம் கிடையாது. கெட்ட பய சார் இந்த போலீஸ் என்று இயக்குனர் வெங்கட் மோகன் தெரிவித்துள்ளார். ஆக, படத்திற்கு காவல் துறை பக்கமும் விளம்பரம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X