ரஜினிகாந்தை மறைமுகமாக கலாய்த்த விஷால்? சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு அடுத்த ஆடு சிக்கிடுச்சு!
சென்னை: கடந்த சில நாட்களாக பா. ரஞ்சித் நக்கலாக சிரித்ததை வைத்து நன்றி கெட்ட ரஞ்சித் ஹாஷ்டேக்கை போட்டு அடி வெளுத்து வந்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அடுத்த ஆடாக விஷால் சிக்கியிருக்கிறார் என ஏகப்பட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் விஷாலை விளாச தொடங்கி விட்டனர்.
ரத்னம் படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஏகப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிக்க ஆரம்பித்துள்ள விஷால் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய்யை போல தானும் அரசியலில் களமிறங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த விஷயத்தை சொன்ன விஷால் மற்றவர்கள் போல வரேன், வரும்போது வருவேன், வராம போய்டுவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். வரேன்னா வரேன் தான் என தனது அரசியல் நிலைபாட்டை கூறியுள்ளார்.
ரத்னம் பட டிரெய்லர்: ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷால் இணைந்து நடித்துள்ள ரத்னம் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. சமுத்திரகனி, கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், முரளி சர்மா உள்ளிட்ட பலர் ரத்னம் படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தின் புரமோஷனுக்காக களம் இறங்கி உள்ள விஷால் 2026 ஆம் ஆண்டு அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் உடன் பிரச்சனை: கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான மார்க்கெட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. ஆனால் அந்த படத்தை செப்டம்பர் 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ரிலீசாக வெளியிடக்கூடாது என ரெட் ஜெயண்ட் நிறுவனம் பிரச்சனை பண்ணதாக விஷால் பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவை யாரும் தன்னுடைய தனிப்பட்ட சொத்து என நினைக்கக் கூடாது. நம்ம கையில தான் சினிமா இருக்குன்னு எவன் நினைச்சாலு அழிஞ்சு போயிடுவான் என பேசியுள்ளார்.
ரஜினிகாந்தை கலாய்த்தாரா?: அரசியலுக்கு வரப் போகிறேன் என விஷால் அறிவித்துள்ள நிலையில், அது குறித்து அவர் கூறும்போது ”வரப் போறேன்.. அவர் சொன்னா தான் வருவேன்.. வர நேரத்துல வருவேன்.. வந்தாலும் வருவேன்.. அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன்” என விஷால் பேசியதை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஷேர் செய்து ரஜினிகாந்தை இப்படி வெளிப்படையாக தாக்கி விட்டாரே விஷால் என கோர்த்து விட்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தான் பல ஆண்டு காலமாக அரசியலுக்கு வருவேன் என அறிவித்து வந்த நிலையில், கடைசியில் அரசியலுக்கு இப்பவும் இல்லை இனி எப்பவும் வரமாட்டேன் என சொல்லியிருந்தார். அதை வைத்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், விஷாலும் அந்த மேட்டரை எடுத்துப் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ரஜினி ரசிகர்கள் விளாசல்: காக்கா - கழுகு பிரச்சனையில் விஜய்யுடன் சண்டை போட்டு வந்த ரஜினிகாந்த் ரசிகர்கள், சமீபத்தில் பா. ரஞ்சித் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு நக்கலாக சிரித்த நிலையில், கடும் கண்டனங்களை எழுப்பினர். இந்நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அடுத்த ஆடு சிக்கிடுச்சு என விஷாலை வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











