இந்தியில் ரீமேக் ஆகிறது இரும்புத்திரை.. பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகிறாரா, விஷால்?

By

சென்னை: ஹீரோவாக நடித்து வரும் விஷால் இந்தி படத்தில் வில்லனாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஷால் நடித்து வெளியாக இருக்கும் படம், சக்ரா. இதை ஆனந்தன் இயக்கி இருக்கிறார்.

இதில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடித்துள்ளனர். இதில் ராணுவ அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார்.

பிப்ரவரி ரிலீஸ்

பிப்ரவரி ரிலீஸ்

ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதையடுத்து அவர் எனிமி படத்தில் நடித்து வருகிறார்.

துப்பறிவாளன் 2

துப்பறிவாளன் 2

இதை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். ஆர்யா இதில் வில்லனாக நடிக்கிறார். மிருணாளினி ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்க உள்ளார். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே அவர் இந்தி படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இரும்புத்திரை

இரும்புத்திரை

விஷால் நடித்து வெளியான படம், இரும்புத்திரை. கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.

தெலுங்கு அபிமன்யுடு

தெலுங்கு அபிமன்யுடு

விஷால் ஃபிலிம்ஃபேக்டரி தயாரித்த இந்தப் படம் தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. அங்கும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் அர்ஜுன் நடித்த வில்லன் கேரக்டரில் விஷால் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தி அறிமுகம்

இந்தி அறிமுகம்

இதன் மூலம் அவர் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார். இதில் ஹீரோவாக நடிப்பது யார், இயக்குனர் யார் என்ற விவரங்கள் வெளிவரவில்லை. ஏற்கனவே படம் வெளியான நேரத்தில், இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X