'அன்டர் அரஸ்ட்'டில் இருக்கும்போதே ட்வீட் செய்யும் விஷால்: புரட்சி தளபதிடா!
Recommended Video

சென்னை: கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள விஷால் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்.
சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு விஷால் மீது அதிருப்தியில் உள்ள தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று பூட்டு போட்டனர். அந்த பூட்டை உடைக்க முயன்ற விஷால் இன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ட்வீட்
கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள விஷால் அங்கிருந்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நேற்று சிலர் பூட்டு போட்டபோது அமைதியாக இருந்த போலீஸ் இன்று தவறே செய்யாத என்னையும், என் சக ஊழியர்களையும் கைது செய்துள்ளது. நாங்கள் போராடுவோம். இளையராஜா சார் நிகழ்ச்சியை நடத்தி கஷ்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு உதவ நிதி திரட்டுவோம் என்று ட்வீட்டியுள்ளார்.
விஷால்
விஷால் கைது செய்யப்பட்ட செய்தியை பார்த்தவர்கள் அவர் ட்வீட் செய்வதை பார்த்து என்னய்யா நடக்குது என்று கேட்கிறார்கள்.
பேச்சுவார்த்தை
கைதாகி இப்படி ட்வீட் போடுவதற்கு பதில் ஒழுங்காக பேச்சுவார்த்தைக்கு போயிருக்கலாமே
டிராமா
டிராமா போடுவதை நிறுத்திவிட்டு பிரச்சனையை தீர்க்க வழி பாருங்க விஷால். #Vishal


Click it and Unblock the Notifications











