Vishal: ரிலீஸுக்கு ரெடியான மார்க் ஆண்டனி... இந்த முறையாவது விஷால் எஸ்கேப் ஆவாரா?
சென்னை: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்தப் படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் ஜானர் படமாக உருவாகியுள்ளது.
விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மார்க் ஆண்டனி ரிலீஸ் தேதி
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எந்தப் படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தற்போது அவர் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படம் மீது அதிக நம்பிக்கையுடன் உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மார்க் ஆண்டனி படத்தின் கதையை கேட்டதுமே இதில் நடிக்க வேண்டும் என ஆர்வம் வந்துவிட்டதாக எஸ்ஜே சூர்யா தெரிவித்திருந்தார். இதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியானது. முன்னதாக இந்த டீசரை தளபதி விஜய்யிடம் சென்று விஷால் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலானது.

அதேபோல், மார்க் ஆண்டனி படத்தின் செம்ம ரகளையான டீசர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மார்க் ஆண்டனி டைம் டிராவல் ஜானரில் சயின்ஸ் பிக்ஸன் திரைப்படமாக உருவாகியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூலை 28ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அதேநேரம் மார்க் ஆண்டனி திரைப்படம் சொன்னபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஷால் - லைகா நிறுவனம் இடையேயான பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால், விஷால் படங்களை வெளியிட லைகா நிறுவனம் தடை கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மார்க் ஆண்டனி படத்தை விஷால் தயாரிக்கவில்லை என்பதால், சொன்னபடி ஜூலை 28ம் தேதி ரிலீஸாகும் என தெரிகிறது.
மார்க் ஆண்டனி வெளியானதும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை முடிக்க விஷால் ரெடியாகிவிட்டாராம். துப்பறிவாளான் முதல் பாகத்தை மிஷ்கின் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை விஷாலே இயக்கி வருகிறார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானால், விஷால் இயக்கத்தில் விஜய் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யை இயக்க வேண்டும் என்பதே விஷாலின் ஒரே லட்சியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











