Vishal: விஷால் அம்மா, அப்பா இவங்க தானா..? அடடே குடும்பத்தோட அசத்துறாங்களே!!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

ஹரியின் படத்தில் நடித்து வரும் விஷால், படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில் விஷால் தனது அம்மா, அப்பாவை சந்தித்து வாழ்த்துப் பெற்ற போட்டோ வைரலாகி வருகிறது.

 Vishal: Vishal celebrates Birthday with his parents

அம்மா, அப்பாவுடன் விஷால்: செல்லமே திரைப்படம் மூலம் அறிமுகமான விஷால், தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறர். நடிப்பைத் தவிர்த்து நடிகர் சங்கத் தேர்தலிலும் விஷால் அதிக கவனம் செலுத்தி வருகிறர். அதேபோல், தயாரிப்பு, இயக்கம் என பிஸியாகிவிட்ட விஷால், நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு பலரும் விஷாலுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்து இயக்குநர் ஹரியுடன் இணைந்துள்ளார். விஷாலின் 34வது திரைப்படமாக இது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஷால், அந்தப் படத்தை அவரே இயக்கி வருகிறார். இதுதவிர மேலும் சில இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளாராம் விஷால்.

சினிமாவில் பிஸியாகவே வலம் வரும் விஷால், சொந்த வாழ்க்கையில் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். ஆனாலும், இந்த பிறந்தநாளை தனது அம்மா, அப்பா ஆகியோருடன் விஷால் கொண்டாடியுள்ளார். விஷாலின் அப்பா ஜிகே ரெட்டி பிரபல தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

இந்நிலையில், விஷால் தனது அம்மா, அப்பா இருவருடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. அம்மா, அப்பா இருவரையும் அரவணைத்தபடி நடுவில் நிற்கிறார் விஷால். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, விஜய்யின் அரசியல் என்ட்ரி, தேசிய விருது ஆகியவை குறித்து அவர் பேசியது வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X