கீர்த்தி சுரேஷை காதலித்த விஷால்?.. பெண் கேட்டு வேற போனாங்களாம்.. நடிகை வீட்டில் வந்த பதில் என்ன?
சென்னை: அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷால். அதற்கு பிறகு செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். ஆனால் தொடர்ந்து அவரால் அந்த வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. இடையில் சில படங்கள் மட்டுமே அவருக்கு கை கொடுத்தன. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ரத்னம் ஆகிய படங்களில் மார்க் ஆண்டனி மெகா ஹிட்டான சூழலில்; இப்போது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துவருகிறார்.
செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். நடிகராக அறிமுகமான பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர்; நல்ல ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். அதன்படியே அவர் நடித்த தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதில் விஷாலின் ஆக்ஷன் காட்சிகள் பலரையும் ரசிக்க வைத்தது. இதனால் பெரும் ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டது.

சறுக்கிய விஷால்: ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் அவருக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு ஹிட்டுக்காக ஏங்கிய விஷால் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் படம் பெரிதாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு எந்தப் படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதற்கிடையே நடிகர் சங்க விவகாரத்தில் சர்ச்சையையும், சரத்குமாருடன் மோதலும் எழுந்தது அவருக்கு.
வரலட்சுமியுடன் பிரிவு?: மேலும் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், விஷாலும் காதலித்து வந்ததாகவும்; சரத்குமாருடன் வந்த மோதலால் அந்தக் காதலில் இருந்து விஷால் வெளியேறிவிட்டதாகவும் ஒரு தகவல் ரொம்ப நாட்களாகவே ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வரலட்சுமி நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விஷாலோ இன்னமும் சிங்கிளாக இருந்து தனது கரியரில் தீவிர கவனத்தை செலுத்திவருகிறார்.
மார்க் ஆண்டனி மெகா ஹிட்: அந்தவகையில் அவர் கடைசியாக மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களில் நடித்தார். அவற்றில் மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். எதிர்பார்ப்பில்லாமல் வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக நூறு கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்ததாக அவர் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துவருகிறார். இந்த விவகாரத்தில்கூட அவருக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் பெரும் மோதல் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் விஷால் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், ""சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷாலும் கீர்த்தி சுரேஷும் ஒன்றாக நடித்தார்கள். அப்போது கீர்த்தி சுரேஷை விஷாலுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால் அந்தப் படத்தின் இயக்குநர் லிங்குசாமி மூலம் கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு விஷாலின் வீட்டினர் சென்றார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டார்கள். அப்போது கீர்த்தி இன்னொருவரை காதலிப்பதாகவும்; விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறிவிட்டார்கள்"" என்றார்.
கீர்த்திக்கு திருமணம்: முன்னதாக கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்களது திருமணம் கோவாவில் நடக்கவிருக்கிறது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. மேலும் தங்களது திருமணத்தையொட்டி சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேரும் தங்களது நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











