கோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கும் விஷால் திருமணம்.. ஜி.கே.ரெட்டி பேட்டியால் ரசிகர்கள் ஷாக்!

விஷாலின் திருமணம் பற்றி பேசியுள்ளார் அவரது அப்பா ஜி.கே.ரெட்டி.

Recommended Video

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிய விஷால் மனைவி

சென்னை: நடிகர் விஷாலின் திருமணம் எப்போது நடக்கும் என்பது பற்றி பேசியுள்ளார் அவரது அப்பா ஜி.கே.ரெட்டி.

நடிகர் விஷாலும், தெலுங்கு தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டியும் காதலிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அவர்களது திருமணம் அக்டோபரில் நடைபெறும் என தகவல்கள் வெளியானது.

ஆனால், திருமண வேலைகள் எதுவும் நடைபெற்வில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இதற்கிடையே அனிஷாவும் தங்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கவும் இந்த பரபரப்பு அதிகமானது.

விஷால் திருமணம்

விஷால் திருமணம்

நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைத்து தான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் அடம் பிடிப்பதாகவும், அதற்கு மணப்பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. இதனால் அவர்களது திருமணம் பாதியிலேயே நின்று விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

விஷால் அப்பா பேட்டி

விஷால் அப்பா பேட்டி

இந்நிலையில், தமயந்தி பட விழாவில் கலந்து கொண்ட விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி முதன்முறையாக விஷாலின் திருமணம் எப்போது என்பது பற்றி மௌனம் கலைத்துள்ளார். அதில் அவர், "விஷால் தன்னுடைய திருமணத்தை நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைத்து தான் நடத்துவேன் என உறுதியளித்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல்

ஆனால், நடிகர் சங்கத் தேர்தல் முடிவடைந்தும் இன்னமும் அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எப்போது வாக்குகள் எண்ணப்பட்டாலும் விஷால் அணி தான் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமேயில்லை.

பொறுமை தேவை

பொறுமை தேவை

அப்படியாக மீண்டும் விஷால் அணி பதவியில் அமரும் போது, நடிகர் சங்க கட்டிட வேலைகள் முழுவதும் முடிக்கப்படும். அதன்பிறகு நடிகர் சங்க புதுக் கட்டிடத்தில் வைத்து விஷாலின் திருமணம் பார் போற்ற கோலாகலமாக நடைபெறும். அதுவரை கொஞ்சம் பொறுமை தேவை" என ஜி.கே.ரெட்டி கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X