தளபதி 69 படத்தை இந்த ஹீரோ இயக்கப் போறாரா?.. அட இது என்னய்யா புது உருட்டா இருக்கே!
சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 தான் என கூறப்படும் நிலையில், தளபதி விஜய்யை இயக்கியே தீருவேன் என பிரபல நடிகர் ஒருவர் ஒற்றைக் காலில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்த படத்தில் அப்பா - மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்து வருவதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாக வெங்கட் பிரபு அறிவித்து விட்டார்.

மேலும், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறாங்க என்கிற முக்கிய அப்டேட்டையும் பூஜை வீடியோவிலேயே தெளிவாக காட்டி விட்டனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா "இனிமே பேச்சு இல்லை வீச்சு" தான் இசையமைத்து வருகிறார்.
இன்னும் 2 படம்தான்: தி கோட் மற்றும் தளபதி 69 படங்கள் தான் விஜய் திரையில் தோன்றவுள்ள கடைசி 2 படங்களா என அவரது அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் ரொம்பவே சோகத்தில் உள்ளனர். தமிழ்நாடு முதல் கேரளா வரை குழந்தைகள் கூட கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துள்ள காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. டோலிவுட் தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தான் தளபதி 69 படத்தை தயாரிக்கப் போகிறது என்கின்றனர்.
இயக்குநர் யாரு?: கார்த்திக் சுப்புராஜ் என ஆரம்பத்தில் பெயர் அடிபட்டு வந்த நிலையில், அவர் இல்லைங்க வாடிவாசல் படத்தை டிராப் செய்து விட்டு வெற்றிமாறன் தான் விஜய்யின் 69வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நாவலை தான் படமாக பண்ணப் போகிறார் என்கிற வரைக்கும் ரசிகர்கள் உருட்டத் தொடங்கினர். இந்நிலையில், இன்னொரு ஹீரோ விஜய் படத்தை இயக்க ரெடியாகி உள்ளதாக கூறுகின்றனர்.
விஷால் இயக்கப் போறாரா?: மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்த விஷால் அதன் 2ம் பாகத்தில் நடித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்து அசிங்க அசிங்கமாக திட்டிக் கொண்டனர். ஆனால், அதன் பின்னர் விஷால் என் தம்பி மாதிரி என மிஸ்கின் பேச ஆரம்பித்து விட்டார். மிஷ்கினை துரத்தி விட்டு துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கிக் காட்டுகிறேன் என சவால் விட்ட விஷால் கடந்த 2 ஆண்டுகளாக அந்த ஸ்க்ரிப்ட் புரியாமல் எப்படி இயக்குவது என தெரியாமல் விழி பிதுங்கி இயக்குநர் ஆவது எப்படி என்கிற கோர்ஸை கற்றுக் கொண்டு வருகிறாராம். கூடிய சீக்கிரத்திலேயே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ள விஷால் விஜய் படத்தையும் இயக்க முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

நடக்குற காரியமா?: விஜய் போலவே அரசியலில் இறங்கப் போகிறேன் என்கிற ரேஞ்சுக்கு பில்டப் செய்து விட்டு இப்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என விஷால் அறிவித்து இருந்தார். தளபதி 69 படத்தை இந்த ஆண்டே முடித்து விட்டு விஜய் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ள நிலையில், விஜய்யை எந்த படத்தில் விஷால் இயக்கப் போகிறார் என்றும் இதெல்லாம் நடக்குற காரியமா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஒருவேளை 2026ல் விஜய்க்கு அரசியலில் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்து விட்டால் விஷால் விஜய்யை வைத்து இயக்க வாய்ப்பு இருக்கு என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











