தீராத விளையாட்டு பிள்ளை விஷால்… கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது!

சென்னை : இயக்குனர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால்31 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் விஷால், யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

இப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

புது இயக்குனர்

புது இயக்குனர்

நடிகர் விஷால் கடைசியாக சக்ரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் பிப்ரவரி 19 அன்று திரையரங்கில் வெளியானது. புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, ரோபோ ஷங்கர், மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

டீசர் விரைவில்

டீசர் விரைவில்

அடுத்ததாக, விஷால்30 திரைப்படமான 'எனிமி'யில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யாவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதாவது விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்று பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தத்ரூபமான சண்டை

தத்ரூபமான சண்டை

விஷாலின் 31வது திரைப்படத்தை து.பா.சரவணன் இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி வீடியோவில், விஷாலின் தலையில் பாட்டிலால் அடிக்கும் காட்சி வெளியாகி வைரலானது.

கிரிக்கெட் விளையாடிய விஷால்

கிரிக்கெட் விளையாடிய விஷால்

தற்போது படப்பிடிப்பின் இடைவேளையின் போது நடிகர் விஷால் மற்றும் யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பை முடிக்க திட்டம்

படப்பிடிப்பை முடிக்க திட்டம்

ஜூலை இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் பரபரப்பாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசின் விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .இப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X