உயிரிழந்ததாக ஏமாற்றிய பூனம் பாண்டே.. இரங்கல் தெரிவித்து ஏமாந்துபோன விஷால் பட நடிகை!
மும்பை: பாலிவுட் முதல் டோலிவுட் வரை கவர்ச்சியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்த நடிகை பூனம் பாண்டே திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், நிர்வாண படங்களில் நடித்து வீடியோக்களை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார். கடந்த 2011ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்றால் மைதானத்திலேயே நிர்வாணமாக ஓடுகிறேன் என அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், அவருக்கு விளையாட்டை பார்க்கவே அனுமதி மறுக்கப்பட்டது.
அதன் பின்னர் தான் ஆடைகளை துறந்து ஆபாசமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பூனம் பாண்டே. கடைசியாக கங்கனா ரனாவத் ஓடிடியில் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே நடத்திய லாக்கப் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட பூனம் பாண்டே தனது கணவர் சாம் பாம்பே கொடிய மிருகத்தை விட தன்னை மோசமாக நடத்தி சித்ரவதை செய்தது குறித்து வெளிப்படையாக பேசி அழுது புலம்பியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், பூனம் பாண்டேவின் உயிரிழந்ததாக அவரே ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியான நிலையில், தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அவர் ரொம்பவே பாசமானவர் என விஷால் படத்தில் ஹீரோயினாக நடித்த ஆகான்ஷா புரி கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தார். நடிகை பூனம் பாண்டே கர்ப்பவாய் புற்றுநோய் பாதிப்புக் காரணமாக ரகசியமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது.
விஷால் பட ஹீரோயின் ஏமாற்றம்: நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் நடித்த நடிகை ஆகான்ஷா புரி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியான பூனம் பாண்டே மறைவை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை என்றும் அவரது மறைவு தன்னை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது என்றும் பதிவிட்டிருந்தார்.
எப்போது பார்த்தாலும் செம போல்டாகவும் தனக்கே உரிய கெத்துடணும் இருப்பார். பெண்கள் எப்போதுமே ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்றும் ஆண்களை நம்பித்தான் வாழ வேண்டும் என நினைக்கக்கூடாது என கூறிவந்த அவர், இப்படி இளம் வயதில் திடீரென புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழப்பார் என்பதை கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தார். ஆனால் தற்போது பூனம் பாண்டே இறக்கவில்லை என தெரிந்ததை அடுத்து ஆகான்ஷா புரி ஏமாற்றம் அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











