ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போலாம்.. மகுடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஞ்சலியை வம்புக்கு இழுத்த விஷால்!
சென்னை: இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள விஷால் இயக்கத்தில் 'மகுடம்' படத்தின் மிரட்டலான டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நச்சிந்தி மச்சானே பாடல் ரிலீஸ்: அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'மகுடம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதமாக படத்தின் அதிரடியான இரண்டாவது சிங்கிள் பாடலான 'நச்சிந்தி மச்சானே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகாதசி வரிகளில், மங்க்லி மற்றும் வேல்முருகன் குரல்களில் தாளம் போட வைக்கும் ஃபோக் ஸ்டைலில் இப்பாடல் வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போறோம்: பாடல் ரிலீஸாகி ட்ரெண்டான ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் 'மகுடம்' படப்பிடிப்பு தளத்தில் விஷால் மற்றும் அஞ்சலி செய்த ஜாலி ரகளை வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் நடிகை அஞ்சலி, நானும் விஷாலும் சேர்ந்து ஒரு ரொம்ப கஷ்டமான சீன்ல நடிச்சோம். அதுல எதிர்பாராதவிதமா என் கால்ல அடிபட்டுடிச்சு. இப்போ நாங்க ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிட்டு இருக்கோம் என்று சீரியஸாகக் கூறுகிறார்.
யோவ் அடங்குயா: அப்போது திடீரென ஓடி வரும் இயக்குனர் விஷால், அஞ்சலியின் பேச்சை இடைமறித்து, நாங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போறோம் என்று செம ஜாலியாகக் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி, விஷாலின் முகத்தை உற்றுப் பார்த்து சிரிப்பை அடக்கிவிட்டு,யோவ்.. அது ஃபர்ஸ்ட் நைட் இல்லய்யா.. ஃபர்ஸ்ட் எய்ட் என்று விஷாலைக் கலாய்த்து திருத்துகிறார். சீரியஸான காயத்தை கூட சிரிப்பு கலந்த கலாட்டாவாக மாற்றிய விஷால் மற்றும் அஞ்சலியின் இந்த ஷூட்டிங் ஸ்பாட் அலப்பறை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டாகி வருகிறது. இயக்குனரானாலும் விஷாலோட குறும்புத்தனம் இன்னும் குறையல என ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கமெண்டுகளை தட்டி விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications