வசூல் வேட்டையில் மதகஜராஜா.. 10 நாட்களில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?.. விஷால் செம ஹேப்பி

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு விஷால் நடித்த படம்தான் மதகஜராஜா. அவருடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 13 வருடங்கள் கழித்து இந்த வருட பொங்கலுக்கு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்தச் சூழலில் பத்து நாட்களில் அந்தப் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஷாலுக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் கொஞ்சம் டல்லாகவே இருந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்தார். அந்தப் படம் மார்க் ஆண்டனி அளவுக்கு ஹிட் இல்லையென்றாலும் முதலுக்கு மோசமில்லை என்ற நிலைமையில் கடந்து சென்றது.

vishal madagajaraja sundar c

மதகஜராஜா: இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் நடித்தார் விஷால். அதில் அவருடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, மணிவண்ணன், மனோபாலா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். முதன்முறையாக சுந்தரும் விஷாலும் இணைந்திருந்ததால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அப்போதே எழுந்திருந்தது. மேலும் படத்தில் விஷால் ஒரு பாடலும் பாடியிருந்தார். அதுதொடர்பான மேக்கிங் வீடியோவும் அப்போது ட்ரெண்டாகியிருந்தது.

இப்போது ரிலீஸ்: எந்தவித பிரச்னையும் இல்லாமல் படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் ரிலீஸில் பிரச்னை ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட கடன் பிரச்னையால் படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடக்கப்பட்டது. ஒருகட்டத்தில் இந்தப் படத்தை சுந்தர். சியும், விஷாலுமே மறந்திருப்பார்கள். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து ஆம்பள என்ற படத்தையும் கொடுத்துவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க 13 வருடங்கள் கழித்து இந்தப் பொங்கலுக்கு மதகஜராஜா ரிலீஸானது.

மெகா ஹிட்: இத்தனை வருடங்கள் கழித்து ரிலீஸாவதால் இப்போதைய ஆடியன்ஸின் மைண்ட் செட்டுக்கும், பல்ஸுக்கும் படம் கனெக்ட் ஆகுமா என்ற அச்சம் படக்குழுவினருக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று இயக்குநர் உட்பட படக்குழுவினர் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கைப்படியே படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. படம் பார்த்த பலரும் வயிறு குலுங்க சிரித்தார்கள். பல தியேட்டர்களில் வேறு படங்களுக்கு பதிலாக மதகஜராஜாவை ரீ ப்ளேஸ் செய்தார்கள்.

எவ்வளவு வசூல்: படத்தின் ப்ரீ க்ளைமேக்ஸ், சந்தானத்தின் காமெடி, விஷாலின் ஆக்‌ஷன் என அத்தனையையும் ரசிகர்கள் ரசித்தனர். விமர்சன ரீதியாக ஹிட்டான படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் பத்து நாட்கள் நிறைவடையும் சூழலில் அது செய்திருக்கும் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மதகஜராஜா திரைப்படம் நேற்று 1 கோடி ரூபாய்வரை வசூல் மொத்தம் 45 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X