மத கஜ ராஜா முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?.. வணங்கான் 3 நாள் வசூலை ஒரே நாளில் முடிச்சிட்டாரே விஷால்!

சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அந்த படத்தின் ப்ரீமியர் காட்சி சனிக்கிழமை இரவு சத்யம் தியேட்டரில் போடப்பட்டது. அதில், நடிகர் விஷால் கலந்துக் கொண்டு பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், படம் பார்த்த ரசிகர்களும் 12 வருஷ பழைய படம் போல தெரியவில்லை என்றும் போரடிக்காமல் சிரிக்க வைத்து அனுப்புவதாக பாராட்ட படத்தின் வசூல் முதல் நாளே பிக்கப் ஆகிவிட்டது.

கடந்த ஆண்டு சுந்தர். சி இயக்கி நடித்து வெளியான அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. தமன்னாவின் பேய்த்தனமான நடிப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டருக்கு வர 100 கோடி ரூபாய் வசூல் வேட்டையை அந்த படம் நிகழ்த்தியது.

vishal madha gaja raja madhagajaraja box office

இந்நிலையில், விஷாலின் மத கஜ ராஜா படமும் முதல் நாளில் சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த பொங்கல் வின்னரே மத கஜ ராஜா தான் என இன்னும் காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நண்டு சிண்டுகளுக்கு எச்சரிக்கை: நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்து ஆளுக்கொரு கருத்துக்களை யூடியூபில் பேசி அவரை தீவிர நோயாளியாக சித்தரித்த நிலையில், தனக்கு இருந்தது வெறும் வைரல் ஃபீவர் தான் என்றும் அன்றைய தினம் போக வேண்டாம் என வீட்டில் சொல்லியும் சுந்தர் சாருக்காக மட்டுமே வந்தேன் என்றும் நண்டு சிண்டுகளுக்கு எல்லாம் சொல்லிக் கொள்கிறேன். நான் வீழ்வேன் என நினைக்காதீர்கள் என பேசியுள்ளார். மேலும், நடிகர் சங்கம் சார்பில் நேற்று நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களையும் விஷால் வழங்கினார்.

காமெடி கலாட்டா: வின்டேஜ் விஷால், வின்டேஜ் சுந்தர். சி மற்றும் வின்டேஜ் சந்தானத்தை பார்க்கவே பக்காவா இருக்கு என்றும் 2 மணி நேரம் படம் போறதே தெரியவில்லை. லாஜிக்குகள் இல்லையென்றாலும் காசு கொடுத்து படத்துக்கு போகும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்புவதே சிறப்பான விஷயம் என படத்தை பலரும் பாராட்ட முதல் நாளே ரசிகர்கள் மத கஜ ராஜா படத்தை பார்க்க தியேட்டருக்கு குவிந்து விட்டனர்.

மத கஜ ராஜா முதல் நாள் வசூல்: விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், சோனு சூட், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா நட்புக்காக கேமியோ ரோலில் ஆர்யா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள மத கஜ ராஜா படத்தில் இடம்பெற்ற விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்க முதல் நாளில் அதிக பட்சமாக 3.2 கோடி ரூபாய் வசூலை மத கஜ ராஜா ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வணங்கான் 3 நாள் வசூல்: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் முதல் நாளில் 95 லட்சம் ரூபாயும், 2ம் நாளில் 1.15 கோடி ரூபாயும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 1 கோடி ரூபாயும் வசூல் வந்து மொத்தமாக 3.05 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது. இதன்மூலம் முதல் நாளே இந்த பொங்கல் ரேஸில் வணங்கான் படத்தை விஷாலின் மத கஜ ராஜா பின்னுக்கு தள்ளியுள்ளது.

பொங்கல் வின்னர் யாரு?: ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை மற்றும் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. அந்த படங்களின் வசூல் நிலவரத்தை பொறுத்து தான் இந்த பொங்கல் வின்னர் யார் என்பதை முடிவு செய்ய முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X