சன்டே நைட் ஷோவும் ஹவுஸ்ஃபுல்.. வரலட்சுமி கிளாமர் தான் ஹைலைட்.. மத கஜ ராஜா பொங்கல் வசூல் வேட்டை!
சென்னை: கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவிய நிலையில், இந்த ஆண்டும் அதே நிலைமை தான் தமிழ் சினிமாவுக்கு என தலையில் தயாரிப்பாளர்களும் தியேட்டர் ஓனர்களும் துண்டை போட்டுக் கொண்டு நிற்க எதிர்பார்க்காத விதமாக விஷாலின் 12 ஆண்டுகள் பழைய படம் ரிலீஸ் ஆகி கடந்த ஆண்டு விஜய்யின் கில்லி படம் தியேட்டரில் ரீரிலீசாகி நடத்திய மேஜிக்கை மீண்டும் ரீக்ரியேட் செய்துள்ளது.
12 வருடங்கள் பழைய படம் என்றாலும் கடைசி நேரத்தில் சுந்தர். சி ரீ மாஸ்டரிங் எல்லாம் செய்து பார்க்க புதிய படம் போலவே கொடுத்தது தான் தியேட்டரில் படத்தை உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. 2ம் பாதி கதை, அஞ்சலி, வரலட்சுமி கவர்ச்சி எல்லாம் அப்படியே விக்ரமின் தூள் படத்தில் இருந்து உருவி சுந்தர். சி தனக்கே உரிய பாணியில் பட்டி டிங்கரிங் பார்த்து படத்தை எடுத்திருக்கிறார்.

பொங்கலுக்கு வெளியான புதிய படங்கள் எல்லாம் ரசிகர்களை கவராத நிலையில், ஜனவரி 12ம் தேதி வெளியாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை நைட் ஷோக்கள் எல்லாம் செம ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும் மத கஜ ராஜா திரைப்படத்தின் இதுவரையிலான பொங்கல் வசூல் வேட்டை குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
சுட்டு படம் எடுத்துட்டு ஃபீல் பண்ணும் சுந்தர். சி: உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இருந்தே ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர். சி. ஹீரோயின்களின் தொப்புள் காட்சிகளையும், தொடை சீன்களையும் வைத்தே கவர்ச்சி பொங்க படமெடுத்து கமர்ஷியல் இயக்குநரான அவரை ரசிகர்கள் அன்பே சிவம் என்கிற ஒரே ஒரு நல்ல படத்தை மட்டுமே கொடுத்த இயக்குநர் என சொல்வதாகவும் சிறந்த இயக்குநர் என பாராட்டுவதில்லை என்றும் மத கஜ ராஜா படத்தின் வெற்றி விழாவில் ஃபீல் பண்ணி பேசியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். படத்தின் 2ம் பாதி அப்படியே தூள் படத்தில் இருந்து தூக்கிட்டாரு என்கின்றனர்.
3 ஹீரோயின்களின் கிளாமர்: மத கஜ ராஜா திரைப்படம் இந்தளவுக்கு தியேட்டருக்கு ரசிகர்களை கொண்டு வர சந்தானம் காமெடியை தாண்டி 3 ஹீரோயின்களின் காம நெடி காட்சிகள் தான் காரணம் என்றும் கால் நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்குன்னா சந்தோஷம் படணுமே தவிர சூப்பர் இயக்குநர் சுந்தர். சின்னு சொல்லணும்னு ஆசைப்படக் கூடாது என கலாய்த்து வருகின்றனர். வரலட்சுமி சரத்குமார் வந்த புதுசுல விஷால் படத்தில் அவரை வைத்து என்ன என்ன வேலை பண்ணியிருக்காருன்னு பாருங்க. வில்லு படத்தின் கிணத்து சீன், யோகா சொல்லிக் கொடுக்கும் சீன், வரலட்சுமியின் ஓபனிங் குளியல் சீன் என எல்லாமே குழந்தைகளை கூட்டிக் கொண்டு படத்தை பார்க்க முடியாதபடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால், அதெல்லாம் தான் தற்போது ரசிகர்களை வசீகரித்து வருகிறது என்கின்றனர். கடைசியாக சதா வேறு வந்து "தும்பைக்கு தும்பை" பாடலில் குத்தாட்டம் போடுகிறார்.

பொங்கல் வசூல் வேட்டை: ஜனவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியான விஷாலின் மத கஜ ராஜா திரைப்படம் நேற்று ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூல் வேட்டையை அள்ளியிருப்பதாகவும் விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை இந்த படம் கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷாலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிப் படமாக இது மாறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











