விஷால் - வரலட்சுமி ஜோடி.. மத கஜ ராஜா ரிலீஸாகப்போகுதா?.. எப்போ தெரியுமா?.. தீயாய் பரவும் தகவல்
சென்னை: நடிகர் விஷால் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக முத்தையாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் மத கஜ ராஜா படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் ரிலீஸாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் அப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்
ரத்னம் விஷால்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்தார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கலவையான விமர்சனம்: அந்த எதிர்பார்ப்போடு சில மாதங்களுக்கு முன்பு ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஷால் ரசிகர்களும், ஹரியின் ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றனர். படத்தின் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் ஹரி பட்டையை கிளப்பிவிட்டார் என்று ஒருதரப்பு ரசிகர்கள் கூறினாலும்; இன்னொரு தரப்பினரோ எதிர்பார்த்தபடி இல்லை என்று பேசினார்கள். அதுமட்டுமின்றி சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மெகா ஹிட்டானதால் ரத்னம் டல்லடித்துவிட்டது.
அடுத்த படம்: அடுத்ததாக குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்றும்; அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்று கூறி தனது அரசியல் பிரவேசத்தையும் அவர் அறிவித்திருக்கிறார்.
மத கஜ ராஜா: இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் மத கஜ ராஜா படத்தில் நடித்திருந்தார். இதில் விஷாலுடன் வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்காக் விஷால் பாடிய ஒரு பாடலின் வீடியோவும் வெளியாகியிருந்தது. ஆனால் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை. அதற்கு பண பிரச்னைதான் காரணம் என்று சொல்லப்பட்டது. அரண்மனை 4 பட ப்ரோமோஷனில்கூட இந்தப் படம் குறித்து கேட்கப்பட்டதற்கு சுந்தர்.சி மேம்போக்காகவே பதிலை சொன்னார். இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











