விஷால் கையை ஆட்டி ஆட்டிப் பேசினாரே.. தெலுங்கில் மத கஜ ராஜா முதல் நாள் வசூல் தேறியதா? நடுங்கியதா?

சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்த "மத கஜ ராஜா" திரைப்படம், ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. பொங்கலுக்கு வந்த ஷங்கரின் கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் பெரிய இயக்குநர்கள் இயக்கியும் பெரிதாக ஓடவில்லை.

தன்னை பெரிய இயக்குநர்கள் பட்டியலில் சேர்க்கவே மாட்டேங்கிறாங்க என அழுது புலம்பிய சுந்தர். சி இயக்கத்தில் 12 வருஷத்துக்கு முன்னாடி உருவாகி ரொம்ப வருடங்கள் கடந்து லேட் ரிலீஸான மத கஜ ராஜா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பொங்கல் வின்னராக மாறியது.

vishal madha gaja raja madha gaja raja box office

இதுவரை 50 கோடி ரூபாய் வரை மத கஜ ராஜா படத்தின் தமிழ் வெர்ஷன் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றி விழா கொண்டாட்டத்தையும் படக்குழு கொண்டாடி முடித்துள்ளது. பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே இந்த படம் தான் வெற்றி விழா கொண்டாடியது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கில் நேற்று மத கஜ ராஜா படத்தை வெளியிட்டுள்ளனர். அதன் வசூல் குறித்த தகவலை இங்கே பார்ப்போம் வாங்க..

காமெடியும் இருக்கு மசாலாவும் இருக்கு: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பார்வையாளர்களை கவர்ந்திழுத்த மத கஜ ராஜா திரைப்படம் தெலுங்கில் ஜனவரி 31ம் தேதி வெளியானது. காமெடி மற்றும் கிளாமர் ஓவர்டோஸாக இணைத்துள்ள இந்தப் படம், ஆந்திரா மற்றும் நிசாம் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றுள்ளது. படம் வெளியாகும் முன்பே அதிக எதிர்பார்ப்பு இருந்தது, அதற்கேற்ப, விசாகப்பட்டினம், ஹைதராபாத், ராஜமுந்திரி, பீமாவரம், வாரங்கல் மற்றும் விஜயவாடா போன்ற நகரங்களில் படம் பெரிய அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

கேம் சேஞ்சரில் மிஸ் ஆனது: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான கேம் சேஞ்சரில் அஞ்சலியை பாட்டியாக நடிக்க வைத்து சைடு சுனில் போல அவரையும் சைடாக நடக்க வைத்து கொடுமைப்படுத்தியிருந்தனர். ஆனால், கேம் சேஞ்சரில் மிஸ் ஆன அஞ்சலியின் கிளாமர் போர்ஷனை பார்த்த டோலிவுட் ரசிகர்கள் இது நல்லா இருக்கு என படத்தை பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

வசூல் அள்ளியதா? நடுங்கியதா?: மத கஜ ராஜா திரைப்படம் தெலுங்கில் மக்கள் மத்தியில் ஒரு சில இடங்களில் வரவேற்பை பெற்றிருந்தாலும் மொத்தமாக பெரிய வசூலை அள்ளவில்லை. தமிழ்நாட்டில் முதல் நாளே 3 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய மத கஜ ராஜா பொங்கல் விடுமுறை நாட்களில் தினமும் 6 கோடி என்கிற ரீதியில் வசூல் அதிகரித்து 50 கோடி வசூலை கடந்தது. ஆனால், தெலுங்கில் முதல் நாளான நேற்று ஒட்டுமொத்தமாக 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை தான் வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கேயும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தால் மட்டுமே படம் பிக்கப் ஆகும். ஆனால், தமிழில் வந்த வசூலே தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜாக்பாட் தான் என்பது தனிக்கதை. விஷால் நடிப்பில் புதிதாக வரும் படங்கள் சொதப்பி வரும் நிலையில், பழைய படமே ஹிட் கொடுத்துள்ளது. விஷாலின் அடுத்த படம் ஓடினால் மட்டுமே அவருக்கான வெற்றியாக இது பார்க்கப்படும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X