ஹீரோவாகவும் இயக்குநராகவும் மகுடம் சூடுவாரா விஷால்?.. ’மகுடம்’ டீசர் எப்படி இருக்கு?

சென்னை: நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் 'மகுடம்'. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனத்தின் 99-வது திரைப்படமாகும்.

இப்படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்க, அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், துறைமுகம் மற்றும் கப்பல் பின்னணியிலான கதைக்களத்தைக் கொண்டது.

Vishal s Magudam Movie Teaser released now here we do a little analysis about the teaser

முன்னதாக 'ஈட்டி' மற்றும் 'ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில காரணங்களால் அவர் விலக, நடிகர் விஷாலே இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

தனது திரைப்பயணத்தில் இயக்குநராக தனது முதல் முயற்சியான இப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு, "30 ஆண்டுகால கனவு நிறைவேறி இருக்கிறது" என்று விஷால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'மகுடம்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதல் காட்சியிலேயே எரியும் உடலில் சிகரெட் பற்ற வைக்கும் வயதான விஷால் தான் படத்தின் மெயின் வில்லன் என்று தெரிகிறது. விஷால் எப்படி வில்லனாக மாறினார் என்கிற ஃபிளாஷ்பேக் போர்ஷனும் நிகழ்காலத்தில் ஒரு விஷால் இவரிடம் சிக்க கதை என்ன ஆகப்போகிறது என்பது தான் மகுடம் படத்தின் திரைக்கதையாக இருக்கும் என்பதை டீசரை பார்த்தால் கொஞ்சம் ஊகிக்க முடிகிறது.

ஆக்‌ஷனில் அஞ்சலி அதகளப்படுத்த ஸ்வீட் உடன் துஷாரா க்யூட்டாக நடித்துள்ள காட்சிகள் இடம்பிடித்துள்ளன. ஜி.வி. பிரகாஷ் இசையில் பின்னணி இசை மற்றும் தீம் பாடல் பேக்கிரவுண்டில் தெறிக்கிறது.

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்க ஆரம்பித்த நிலையில், அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், மகுடம் படத்தை விரைவாக முடித்த விஷால் ஜூலை மாதம் ரிலீஸ் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். சுந்தர். சி இயக்கத்தில் தமன்னாவுடன் நடித்த புருஷன் படம் சம்மர் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படம் எந்த சம்மருக்கு வரும் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இயக்குநராகவும் ஹீரோவாகவும் சமீப காலமாக கென் கருணாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் கலக்கி வரும் நிலையில், விஷாலும் கலக்குவாரா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை போலவே பல காட்சிகள் இருப்பதாகவும் விஷாலின் வித்தியாசமான கெட்டப்புகள் ஹெவியாக அந்த படத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X