Vishal Health: சொற்ப காசுக்காக இப்படியா?.. கற்பனைகளை பரப்பாதீர்.. விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

சென்னை: மதகஜராஜா பட விழாவில் பங்கேற்ற விஷால், மேடையில் கைகள் நடுங்கியபடி பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் விசாரித்தனர். ஆனால், சோசியல் மீடியாவில் அவரின் உடல்நிலை குறித்து மோசமான கருத்துக்கள் வரும் நிலையில், விஷால் மக்கள் நல இயக்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,சொற்ப காசுக்காக இப்படியா பேசுவீர்கள் என கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த சில நாட்களாக நடிகரும், தயாரிப்பாளரும் மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளருமான விஷாலின் உடல்நிலை குறித்து பல அவதூறுகளை தங்களின் வாய்க்கு வந்த கதைகளையும், கற்பனைகளையும் ஊடகங்கள் என்ற விளம்பரம் தேடி வரும் ஒரு சில விஷம எண்ணம் கொண்ட நபர்களால் பொய்யான செய்தியை மட்டும் பரப்பி வருகின்றனர். தற்போது,இந்த அறிக்கை வெளியிடும் நோக்கம், அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

Vishal Health rumors

மாறாக இவ்வளவு பொய்களையும், வதந்திகளும் பரப்பி அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாமல் அதே சமயத்தில் எங்கள் தலைவர் விஷால் மீது பாசம் கொண்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா தெலுங்கானா மற்றும் கர்நாடகா மக்களுக்கும் அவர் மீது அளவில்லா அன்பு கொண்ட ரசிகர்கள் மக்கள் நல இயக்கத்தின் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.

சொற்ப காசுக்காக இப்படியா: நடிகர் விஷாலுக்கு உண்மையில் என்ன பிரச்சனை என்பதை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள், நம்பிக்கைமிக்க நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து, உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறு பரப்பி வருகின்றனர்கள். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு கோமாளியாக்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

Vishal Health rumors

அவர்களுக்கு எங்களின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க தயாராக இல்லை. அதே சமயம், இன்று எங்கள் தலைவர் விஷாலுக்கு ஏற்பட்ட அவதூறுகள், கற்பனை கதைகளைப் பரப்புவது போல் இனி வரும் காலங்களில் வேறு யாருக்கும் நடைபெறக்கூடாது என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம் என்று விஷால் மக்கள் இயக்கம் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X