Mark Antony movie: தளபதி விஜய்க்கு தேங்க்ஸ் கார்ட்.. அதிரடி காட்டும் மார்க் ஆண்டனி படம்!
சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் மார்க் ஆண்டனி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ளது.
படத்திற்கு சிறப்பான கமெண்ட்ஸ் கிடைத்துள்ள நிலையில், படம் விஷாலிற்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தளபதி விஜய்க்கு தேங்க்ஸ் கார்டுடன் வெளியான மார்க் ஆண்டனி படம்: நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்றைய தினம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாகியுள்ளது மார்க் ஆண்டனி. டைம் டிராவலை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் இருவேறு காலகட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளனர்.
படத்தில் ரிது வர்மா, அபிநயா, செல்வராகவன் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. தொடர்ந்து படத்திற்கான சிறப்பான ப்ரமோஷன்களும் முன்னெடுக்கப்பட்டன. முன்னதாக படத்தை ரிலீசுக்கு தடை விதிக்கக்கோரி லைகா தொடர்ந்த வழக்கில் படத்தின் வெளியீட்டிற்கான தடை நீக்கப்பட்டதில் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் படத்தின் நாயகன் விஷால், திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியானது. நாம் எவ்வளவுதான் விஷயங்கள் செய்தாலும் இறுதியில் கடவுளிடம்தான் சரணடைவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் படத்தின் வெற்றிக்காக கடவுளின் ஆசிர்வாதத்தை எதிர்பார்த்து தான் திருப்பதிக்கு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் அடுத்த ஆண்டிற்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்திருந்தார்.

சர்வதேச அளவில் மூன்று மொழிகளில் மார்க் ஆண்டனி படம் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்றைய தினம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சந்திரமுகி 2 படமும் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், சோலோவாக இன்று வெளியாகி மார்க் ஆண்டனி படம் மாஸ் காட்டி வருகிறது. ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்களும் கிடைத்துள்ளன.
இதனிடையே இந்தப் படத்தின் டீசரை முன்னதாக வெளியிட்டிருந்த நடிகர் விஜய்க்கு படத்தின் டைட்டிலில் நன்றி தெரிவித்து கார்ட் போடப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் நிகழ்வுகளை அறிமுகப்படுத்தும் வகையில் நடிகர் கார்த்தியின் பின்னணி குரலும் படத்தின் வெற்றிக்கு மிகச்சிறப்பான வகையில் துணை புரிந்துள்ளது. மேலும் படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











