நடிகர் சங்கத் தேர்தல்: மீண்டும் களமிறங்கும் விஷாலின் பாண்டவர் அணி.. ஒரு நடிகர் மட்டும் மிஸ்ஸிங்!
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை விஷால் அணி வெளியிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 2019 முதல் 2022ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக முன்னின்று இத்தேர்தலை நடத்துகிறார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அனைத்து நடிகர்களும் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, அன்றைய தினம் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்க நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் மீண்டும் விஷாலின் பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இதற்காக 26 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்திக் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுகிறார்.
இவர்களில் பெரும்பாலானோர் கடந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











