படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
சென்னை: கில்லி படத்தின் ரீ ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே டிக்கெட் புக்கிங்கை தொடங்கி விட்டனர். ஆனால், நாளை வெளியாகவுள்ள ரத்னம் படத்துக்கு இன்னமும் டிக்கெட் புக்கிங் பல திரையரங்குகளில் ஆரம்பிக்காமல் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரசாந்தை வைத்து தமிழ் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் ஹரி. அந்த படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரமை வைத்து சாமி படத்தை இயக்கினார். சாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தொடர்ந்து ஆக்ஷன் படங்களை இயக்க ஆரம்பித்தார்.

கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம், வேங்கை, சிங்கம் 2, பூஜை, சிங்கம் 3, சாமி ஸ்கொயர், யானை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
ஏகப்பட்ட ஹிட்: சாமி, ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம், சிங்கம் 2 என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்குநர் ஹரி கொடுத்துள்ளார். சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக சூர்யா அதிரடியாக அறிவித்து விட்டார். இந்நிலையில், விஷாலை வைத்து ரத்னம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி இயக்குநராக மாற போராடி வருகிறார்.
புரமோஷனுக்கு வராத ஹீரோயின்: விஷால் மற்றும் ஹரி மட்டுமே ரத்னம் படத்தை தீவிரமாக புரமோட் செய்து வந்தனர். ஆனால், அந்த படத்தின் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் எந்தவொரு புரமோஷனிலும் பங்கேற்கவில்லை என ரசிகர்கள் அப்செட் அடைந்துள்ளனர். ரத்னம் படம் அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தை பார்க்க வாங்க என தியேட்டர்களுக்கு சென்றும், தெருத்தெருவா சென்றும் மக்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார் ஹரி.
புக்கிங் ஓபன் ஆகல: நாளை ரத்னம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இன்னமும் 3 தியேட்டர்களுக்கு மேல் பெரிதாக டிக்கெட் புக்கிங் புக் மை ஷோவில் ஓபனே ஆகவில்லையே? என்ன பிரச்சனை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எல்லாமே க்ரீன்: மேலும், இதுவரை டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ள சென்னையில் உள்ள சில திரையரங்குகளிலும் ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. கடைசியாக விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூல் செய்த நிலையில், திடீரென என்ன ஆச்சு என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கிறது.
பாசிட்டிவ் விமர்சனம் வந்தால் தான்: ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாதால் தான் தியேட்டருக்கு ரசிகர்கள் கூட்டம் வரும் என்று கூறுகின்றனர்.
கில்லி ரீ ரிலீஸ் கூட்டம்: சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் ஹரி கில்லி படத்தின் ரீ ரிலீஸுக்கு வந்த கூட்டம் கூட சென்னையில் ஓட்டுப் போட வரவில்லை என பேசியிருந்தார். இந்நிலையில், அதே நிலைமை ஹரியின் ரத்னம் படத்துக்கும் ஆகி விடுமா இந்த வாரம் விஷாலாவது தமிழ் சினிமாவை காப்பாற்றுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











