Mark Antony Day 5 Box Office: தியேட்டர்களில் தொடரும் சரவெடி.. மார்க் ஆண்டனி மொத்த வசூல் எவ்வளவு?
சென்னை: தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில், மார்க் ஆண்டனி செவ்வாய்க்கிழமை ஒரேயடியாக படுத்து விட்டதா என்றால் அதுதான் இல்லை என்கின்றனர். சுமார் 60 சதவீதம் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 5வது நாளிலும் நல்ல வசூலை விஷாலின் மார்க் என்ற திரைப்படம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரிது வர்மா, சுனில், அபிநயா மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசையில், விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவின் மரண மாஸ் நடிப்பின் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் போனில் டைம் டிராவல் செய்யும் வித்தியாசமான கதையுடன் உருவாகி ரசிகர்களை வெகுவாக என்டர்டெயின் செய்து வருகிறது.
மிரட்டிய இயக்குநர்: திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனா இப்படி ஒரு கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுத்துள்ளார் என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மார்க் ஆண்டனி 5 நாள் வசூல்: மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் அந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. படம் வெளியான நான்கு நாட்களில் 54 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து வார நாட்களான செவ்வாய்க்கிழமை நேற்று மார்க் ஆண்டனி திரைப்படம் சுமார் 4 கோடி ரூபாய் அளவு வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
மொத்தமாக ஐந்து நாட்களில் மார்க் ஆண்டனி திரைப்படம் 58 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஷால் ரொம்பவே ஹேப்பியாக கொண்டாடி வருகிறார்.
விஜய் ஆண்டனி மகளுக்கு இரங்கல்: மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவும் வாய்ப்புகள் அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஷால் இந்த படத்துக்காக உயிரை கொடுத்து உழைத்த நிலையில், அவருக்கு தக்க பலன் கிடைத்து இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மரண செய்தி அறிந்து மிகுந்த மனவேதனைக்கு ஆளான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவையும் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











