விஷால் உடலில் இறங்கிய முனி.. கோயிலைத் தொட்டு பாருங்க.. ஆவேசமான பேச்சு!
சென்னை: முனீஸ்வரன் கோவில் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற மார்க் ஆண்டனி இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஷால் உண்மையிலேயே உடலில் முனி இறங்கியது போல ஆவேசமாக பேசினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள படம் மார்க் ஆன்டனி. இப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது.
டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இசைவெளியீட்டு விழா: மார்க் ஆண்டனி படத்தின் இசைவெளியீட்டு விழா, 9ம் தேதி சென்னை, ஈக்காட்டுதாங்கலிலுள்ள முனீஸ்வரன் கோவில் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய நடிகர் விஷால், என் பின்னாடி இருக்கும் அய்யனார் சாமிக்கும்,என் முன்னாடி இருக்கும் சாமிக்கும் என் வணக்கம்.
அவர் சரியான ஆளு: அய்யனார் கோவிலில் இந்த பாடல் வெளியிட வேண்டும் என்றால், அது சாதாரண ஆளாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். மனித வடிவில் அய்யனாராக இருக்கும் ராஜ்கிரண் சார் இந்த பாடலை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஏன் என்றால் இந்த இடத்தில் பாடலை வெளியிட இவர் தான் சரியான நபர் என்றார்.

விஷால் பேச்சு: தொடர்ந்து பேசிய விஷால், ஈக்காட்டுதாங்கல் முனீஸ்வரன் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருப்பதாக எழுந்துள்ள பிரச்சனை குறித்து பேசினார். இந்தக் கோயில் கட்டிக் கிட்டத்தட்ட 63 வருஷம் ஆகி இருக்கு. PWD இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டதா போர்டு வச்சிருக்காங்க. இந்த இடத்தைக் காலி பண்ணனும்னு சொல்றாங்க.
கோவிலை தொட்டுப் பார்க்கட்டும்: ஆக்கிரமித்த நிலத்தை மீட்பது எனக்கு ஒன்னும் புதுசு இல்ல, நடிகர் சங்க நிலத்தையே மீட்டவன் நான், அந்தச் சிலையை உடைக்கிறதுக்கு முன்னாடி உங்கள் சார்பாக நான் தான் முதலில் வந்து நிற்பேன். கோவிலை தொட்டுப் பார்க்கட்டும், நான் சும்மா சொல்லிட்டு போற மனுஷன் கிடையாது. வாழ்க்கையில் எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். இதுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். கடவுளை நம்புவோம் என்று நடிகர் விஷால் சாமி வந்தது போல ஆக்ரோஷமாக பேசினார்.


Click it and Unblock the Notifications











