'விஷயம் வெளிய தெரியக்கூடாது'!
வேற ஒண்ணுமில்ல.. புதுசா வரப் போற தமிழ்ப் படத்தோட தலைப்புதான் இது.
உழைத்த காசில் இன்பம் இருக்காது. அடுத்தவர் காசுன்னா துன்பம் இருக்காது. எனவே பணம் சம்பாதிக்க எந்த தில்லுமுல்லு, மோசடியிலும் இறங்கலாம் என்ற எண்ணம் கொண்ட 5 இளைஞர்கள், நண்பர்கள்.
ஒருவருக்கு்த தெரியாமல் இன்னொருவர் மோசடியில் இறங்க, எதிர்ப்பாராத நேரத்தில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான், 'விஷயம் வெளிய தெரியக் கூடாது'.

ஓபன் ஐ தியேட்டர்ஸ் சார்பில் வி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தை, ஏ ராகவேந்திரா இயக்குகிறார்
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் சென்ராயன். காமெடி, குணச்சித்திரம் என நடித்துக் கொண்டிருந்தவர் இப்போது முழு ஹீரோவாகிவிட்டார். இவருடன் ஆர்யன், மூடர் கூடம் குபேரன், நாடோடிகள் நங்கன், அம்பா சங்கர் ஆகியோர் மற்ற கில்லாடிகளாக நடிக்கிறார்கள். அமிதா முக்கிய பாத்திரத்தில் வருகிறார்.
இயக்குநர் ராகவேந்திராவே இசையும் அமைத்துள்ளார்.
45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டவர்கள், அடுத்த மாதம் படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











