Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'விஷ்ணு விஷால் வெளிப்படையானவர்... அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்': அமலா பால்!
ராட்சசன் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தான் தன்னுடைய நல்ல நண்பர் என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார்.
[ கண்பார்வையற்ற கொலைகாரனாக உருமாறும் விக்ரம்... ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்கிறார்! ]
அக்டோபர் 5ஆம் தேதி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஆவலாக இருக்கிறேன்
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை அமலா பால், "இந்த படத்தில் நடிக்கும் போதில் இருந்தே, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரொம்ப ஆவலாக காத்திருக்கிறோம். படத்தின் டிரெய்லர் செம சூப்பராக வந்துள்ளது.
கதை புரியவில்லை
இயக்குனர் ராம் இப்படத்தின் கதையை சரியாக சொல்லவில்லை. பின் விஷ்ணு தான் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என சொல்லி, அவரே கதையை எனக்கு விளக்கினார். கதை மிகவும் பிடித்தது. ராம் ஒரு கடின உழைப்பாளி. நேரம் எடுத்து மிகவும் விரிவாக, தெளிவாக படத்தை எடுப்பார்.
விஷ்ணுவை எனக்கு பிடிக்கும்
சினிமாவில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது. விஷ்ணு இந்த படத்துக்கு பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார். நடிக்க வருபவர்களுக்கு விஷ்ணு ஒரு இன்ஸ்பிரேஷன். படத்துக்காக அவருடைய உழைப்பு அபரிமிதமானது. அவருடைய வெளிப்படையான பழக்க வழக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும்
நம்ம ஊரு திரில்லர்
ஒட்டுமொத்த படக்குழுவும் படம் சிறப்பாக வருவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கிறது. திரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள். ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கும்", என அமலா பால் கூறினார்.