என் தம்பி விஷ்ணு...- பாசக்கார விஷால்
விஷ்ணு என் தம்பி மாதிரி. அதனால்தான் அவரது ஜீவா படத்தை நானே வாங்கி வெளியிடுகிறேன் என்று நடிகர் விஷால் கூறினார்.
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி சுசீந்திரன் எடுத்துள்ள படம் ‘ஜீவா'. இதில் விஷ்ணு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மேலும், சூரி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

இசை வெளியீடு
இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. பின்னர் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இப்படம் குறித்து பட அனுபவங்களைப் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆர்யா தயாரிப்பு
அந்த விழாவில் படத்தை தயாரித்துள்ள நடிகர் ஆர்யா, இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் நடிகர் விஷால், நாயகன் விஷ்ணு, இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர்கள் நட்டி நடராஜ், மதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

என் தம்பி
இந்த விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, "விஷ்ணு என்னுடைய தம்பி மாதிரி. அதனால்தான் இந்த படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்தேன். எல்லா ஹீரோவுக்கும் ஒரு படம் ஒரு திருப்புமுனையை அமைத்துக் கொடுக்கும். அதேபோல், இந்த படம் விஷ்ணுவுக்கு திருப்புமுனையாக இருக்கும். கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும்," என்றார்.

கதையே கேட்கல
நடிகர் ஆர்யா பேசும்போது, "இந்த படத்தோட கதையை நான் கேட்கவே இல்லை. ஒரு படம் எடுக்கப் போறோம் நீங்க தயாரிச்சா நல்லா இருக்கும்னு என்கிட்ட வந்து சொன்னாங்க. அவங்க சொன்னதும் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படம் முடிவடைந்து விஷால் பார்த்துவிட்டுத்தான் படம் நன்றாக வந்திருக்கு என்று என்னிடம் சொன்னார். இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்புகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











