தம்பிக்கும் எனக்கும் என்ன சண்டை.. கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் விவகாரம்.. விஷ்ணு மஞ்சு விளக்கம்!
சென்னை: கண்ணப்பா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை இன்று நடிகர் விஷ்ணு மஞ்சு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடத்தினார். அப்போது அவரிடம் கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் விவகாரம் குறித்த கேள்விக்கு விளக்கமாக பதில் அளித்துள்ளார். தான் கேட்காமலே சிஜி பணிகளை மேற்கொண்ட நிறுவனம் ஹார்ட் டிஸ்க் அனுப்பி வைத்ததாகவும் தனது தம்பியின் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் தான் அதனை எடுத்துச் சென்றதாக தகவல் தெரிய, அவர்கள் மீது போலீஸில் புகார் அளித்தோம் என்று கூறியுள்ளார்.
பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு மற்றும் லக்ஷ்மி மஞ்சு என 3 குழந்தைகள் உள்ளனர். அப்பாவை போலவே மூவருமே சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். மனோஜ் மஞ்சு நடித்த பைரவம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. முதல் மனைவி வித்யா தேவிக்கு லக்ஷ்மி மஞ்சு மற்றும் விஷ்ணு மஞ்சு பிறந்தனர். மனோஜ் மஞ்சு நடிகர் மோகன் பாபுவின் 2வது மனைவியான நிர்மலா தேவிக்கு பிறந்தவர்.

விஷ்ணு மஞ்சு நடித்துள்ள கண்ணப்பா திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் அதன் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த விவகாரத்தில் விஷ்ணு மஞ்சுவின் சகோதரர் மனோஜ் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்: விஎஃப்எக்ஸ் செய்யப்பட்ட கன்டென்ட் ஹார்ட் டிஸ்க்கை நாங்க கேட்காமலே அந்த நிறுவனம் ஏன் அனுப்பியது என்றே தெரியவில்லை. பொதுவாகவே எங்க அப்பா வீட்டுக்குத்தான் எந்தவொரு விஷயமும் வரும் ஒன்று ஆபிஸுக்கு வரும், இன்னொன்று தான் அங்கே செல்லும். ரகு என்பவர் அதை கொரியர் காரரிடம் வாங்கி சரிதா என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் இருவருமே என் சகோதரர் மஞ்சுவிடம் வேலை பார்ப்பவர்கள். இந்த விவகாரம் தெரிந்ததும், அப்பாவிடம் சொன்னேன், அதன் பின்னர் தான் வழக்கு பதிவு செய்தோம் என விளக்கம் கொடுத்துள்ளார்.
அப்பாவையே அடிக்க வந்த மனோஜ்: சில மாதங்களுக்கு முன்பு நடந்த சொத்து தகராறு காரணமாக அப்பா மோகன் பாபுவையே மனோஜ் அடிக்க வந்ததாக பெரிய பிரச்னை வெடித்தது. இந்த விவகாரத்திலும் தனது தம்பியின் பெயரை இழுக்க வேண்டாம் என்று தான் பார்த்தேன் என்றும் வேறு வழியில்லாமல் சொல்ல வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. குடும்ப பிரச்னை தொடர்பான கேள்விகளை தவிர்த்துவிடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்சார் போர்டில் பிரச்னை: ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டாலும் பேக்கப் இருக்கிறது. ஒருவேளை அதில் உள்ள காட்சிகள் லீக் ஆனால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தவிர சென்சார் போர்டு தனது கண்ணப்பா படத்தில் வாயில் இருந்து தண்ணி எடுத்து லிங்கத்துக்கு ஊற்றுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதுதானே வரலாறு, கண்ணப்பா மாமிசங்களை சிவனுக்கு படைத்தார் என்றும் தனது கண்ணை பிடுங்கி பக்தியின் மிகுதியில் வைத்தார் என்பது தான் புராணம், அதை நாம் எப்படி மாற்ற முடியும் என்றார்.
காதல் காட்சிகள் குறித்து கேள்வி: விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக ஸ்டார் படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். கண்ணப்பா படத்தில் காதல் காட்சிகள் எங்கே இருந்து வந்தது என்றெல்லாம் கேட்கிறாங்க, ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறக்கிறது என்றால், காதல் இல்லாமலா? எனக் கூறிய விஷ்ணு மஞ்சு அடுத்த வாரம் சென்சார் போர்டை நல்லபடியாக சமாளிக்க வேண்டும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











