ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்... மோகன்பாபு மகன் வெளியிட்ட புகைப்படங்கள்... இணையத்தில் வைரல்
ஐதராபாத் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன்பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்
சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்தே சூட்டிங்கின்போது நடிகர் ரஜினிகாந்த், மோகன்பாபுவை நேரில் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்ச்சூ தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நீண்டகால நண்பர்கள்
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருவரும் நீண்ட காலங்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். தமிழில் ரஜினியின் சில படங்களில் மோகன்பாபு நடித்துள்ள நிலையில், தெலுங்கில் நாட்டாமை ரீமேக்கான பெத்தராயுடு படத்தில் மோகன்பாபு நடித்திருந்த நிலையில் விஜயகுமார் கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார்.

வீட்டிற்கு சென்ற ரஜினி
இந்நிலையில் தற்போது அண்ணாத்தே படத்தில் நடித்துவரும் ரஜினி அதன் சூட்டிங் ஐதராபாத்தில் நடந்த நிலையில், சூட்டிங்கின் இடையில் மோகன்பாபு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

ட்விட்டரில் வெளியிட்ட விஷ்ணு
சில தினங்களுக்கு முன்னதாக மோகன்பாபுவின் மகள் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலானது. இந்நிலையில் தறபோது அவரது மகன் விஷ்ணு மஞ்ச்சூ ரஜினி மற்றும் மோகன்பாபுவுடன் தானும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இணைந்து எடுத்த புகைப்படங்கள்
மேலும் இந்த புகைப்படங்களுக்கு ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ் என்று அவர் கேப்ஷன் வெளியிட்டுள்ளதுதான் புகைப்படங்களுக்கு சிறப்பை சேர்த்துள்ளது. இந்த புகைப்படங்களில் அவர்கள் இருவரும் வெள்ளைநிற உடையில் சிறப்பான தோற்றத்துடன் காணப்படுகின்றனர். அவர்களுடன் ஒரு புகைப்படத்தில் விஷ்ணு மஞ்ச்சூவும் உள்ளார்.


Click it and Unblock the Notifications











