Kannappa collection: இரண்டாம் நாளில் சரிவடைந்த கண்ணப்பா.. படத்தின் மொத்த வசூல்!

சென்னை: இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கண்ணப்பா' திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இப்படத்தை மோகன் பாபு தயாரித்துள்ளார். இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவலை பார்க்கலாம்.

'மகாபாரதம்' தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, ஆர். சரத்குமார், மது, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், காஜல் அகர்வால், மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். A.V.A எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Kannappa box office
Photo Credit:

கண்ணப்பா: 2 ஆம் நூற்றாண்டில் காட்டுப் பகுதியில் ஐந்து இனத்தவர்கள் வந்து வருகின்றனர். இதில் ஒரு இனத்தின் தலைவனாக இருக்கிறார் சரத்குமார். அவரின் மகனாக தின்னன் என்கிற கதாபாத்திரத்தில் மஞ்சு விஷ்ணு நடித்துள்ளார். தின்னனின் உயிர் நண்பனை அம்மனுக்கு பலி கொடுத்ததால் கடவுள் இல்லை, அது ஒரு கல் என்று கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருக்கிறார் தின்னன். ஆனால், மோகன் பாபு, வாயு லிங்கம் பூஜை செய்து சிவபக்தராக வருகிறார். அந்த வாயு லிங்கத்தை அபரிக்க காளா முகி ஆட்களை அனுப்புகிறார். அவர்களை தின்னன் கொன்று விடுகிறான். இதனால், கோவமடைந்த காளா முகி, இந்த குடிகள் மீது படையெடுக்கிறார். தின்னனைக் கொன்று வாயு லிங்கத்தைக் கைப்பற்ற திட்டமிடுகிறார்.

படத்தின் கதை : அந்த வாயுலிங்கத்தை காப்பாற்ற ஐந்து இனத்தினரும் ஒன்று சேருகின்றனர். இதில் நடக்கும் சண்டையில் தின்னனின் தந்தையான சரத்குமார் கொல்லப்படுகிறார். தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்க தின்னன் களத்தில் இறங்குகிறார். காளா முகியை தின்னன் எப்படி அழித்தார்? கடவுளை நம்பாத தின்னன் எப்படி கண்ணப்பராக மாறினார் என்பது தான் கண்ணப்பா திரைப்படத்தின் மீதி கதை. சிவபக்தர்கள் கொண்டாடும் வகையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விஷ்ணு மஞ்சு கண்ணப்பராகவும், நடிகர் பிரபாஸ் ருத்ரா என்னும் வேடத்திலும், மோகன்லால் கிராதகா என்கிற கதாபாத்திரத்திலும், அக்ஷய் குமார் சிவபெருமானாகவும், காஜல் அகர்வால் பார்வதி தேவியாகவும், சரத்குமார் நாதநாதூடு கதாபாத்திரத்திலும், மதுபாலா பன்னகா கதாபாத்திரத்திலும், நெமலி வேடத்தில் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். தின்னனாக மஞ்சு விஷ்ணு அசத்தியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் விஷ்ணு திறமையான நடிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

படத்தின் இரண்டாம் நாள் வசூல்: தியேட்டரில் இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் படத்தின் வசூல், சாக்னில்க் படி, இந்தியாவில் முதல் நாளில் ₹9.35 கோடி வசூலையும் வெளிநாடுகளில் ₹2 கோடி வசூலுடன், படம் உலகளவில் ₹13 கோடி வசூலித்தது. நேற்று சனிக்கிழமை விடுமுறை என்ற போதும், இரண்டாவது நாள் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, இந்தியாவில் ₹5.94 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. படத்தின் மொத்த வசூல் ₹16.07 கோடியாக உள்ளது. மஞ்சு விஷ்ணு நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக கண்ணப்பா திரைப்படம் மாறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X