Silk Smitha -அதே ஊர், அதே மாதம்.. சில்க் ஸ்மிதாவின் மறுபிறவிதான் மார்க் ஆண்டனியில் நடித்திருக்கிறாரா?

சென்னை: Silk Smitha in Mark Antony (மார்க் ஆண்டனியில் சில்க் ஸ்மிதா) மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஷால் பல வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படம் படுதோல்வியை சந்தித்தது. அவரிடமே சென்று உங்களது கடைசி ஹிட் படம் என்னவென்று கேட்டால் அவருக்கு ஞாபகம் வராத அளவுதான் அவருடைய நிலைமை இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கூறிவருகின்றனர்.

 Vishnu priya who looks like Silk Smitha has acted in Mark Antony

மார்க் ஆண்டனி: இந்தச் சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார் விஷால். அவருடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திலாவது ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர். அவரது எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா இல்லை புஸ்வானம் ஆகுமா என்பது செப்டம்பர் 15ஆம் தேதி தெரிந்துவிடும்.

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: அதேசமயம் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக இந்தப் படம் ஹிட் படமாக அமையும் என்று விஷாலின் ரசிகர்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் டைம் ட்ராவலை மையப்படுத்தி இதுவரை வந்த படங்கள் மெகா ஹிட்டாகியிருக்கிறதோ இல்லையோ டீசண்ட்டான வரவேற்பையாவது பெற்றிருக்கின்றன. மார்க் ஆண்டனியும் அந்த ஜானரில் வருவதால் நம்பிக்கை பிறக்கிறது.

ட்ரெய்லரின் ஹைலைட்: மார்க் ஆண்டனி ட்ரெய்லரில் டைம் ட்ராவல் என்ற கான்செப்ட் கவனம் ஈர்த்தாலும் அதைவிட அதிகப்படியான கவனத்தை ஈர்த்தது சில்க் ஸ்மிதா தோன்றியதுதான். எஸ்.ஜே.சூர்யாவுடன் ரெட்ரோ பாடல்லுக்கு சில்க் ஸ்மிதா நடனம் ஆடுவது போன்று காட்சிகள் இருக்கின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஸ்க்ரீனில் சில்க் ஸ்மிதாவா என்ற ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.

யார் நடித்தது?: இதனையடுத்து சில்க் ஸ்மிதாவை எப்படி மீண்டும் ஸ்க்ரீனில் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப தொடங்கினர். முதலில் அது AI தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் தற்போது அதுகுறித்த உண்மை விவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி அச்சு அசல் சில்க் ஸ்மிதா போன்றே இருக்கும் விஷ்ணு ப்ரியா என்பவர்தான் இதில் நடித்திருக்கிறாராம்.

விஷ்ணுப்ரியா: திருப்பதியை பூர்வீகமாகக் கொண்ட விஷ்ணு ப்ரியா பார்ப்பதற்கு அப்படியே சில்க் ஸ்மிதா போன்றே இருக்கிறார். அவர் இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சாதாரணமாக ஒரு வீடியோவை வெளியிட்டேன். அது வைரலாகிவிட்டது. சில்க் ஸ்மிதா 1996ல் இறந்தார். நான் 1997ல் பிறந்தேன். அவருடைய பிறந்தநாள் டிசம்பர் 2.

என்னுடைய பிறந்தநாள் டிசம்பர் 13. என்னை எல்லோரும் சில்க் ஸ்மிதாவின் மறு பிறவி என்று சொல்வார்கள். சில்க் எனது கனவில் பல முறை வந்திருக்கிறார்" என்றார். அவரது இந்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் சில்க் ஸ்மிதாவுக்கும் இவருக்கும் உருவத்தில் மட்டுமின்றி பிறந்த மாதத்திலும், பிறந்த ஊரிலும் இருக்கும் ஒற்றுமை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனையடுத்து சில்க் ஸ்மிதாவின் மறுபிறவிதான் மார்க் ஆண்டனியில் நடித்திருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X