வாய்ப்பு தருவதாக.. தனது பெயரை பயன்படுத்தி போலி மெசேஜ்.. புதுமுக நடிகைகளுக்கு பிரபல ஹீரோ எச்சரிக்கை!

By

சென்னை: தனது பெயரை பயன்படுத்தி போலியான மெசேஜ்கள், நடிகைகளுக்கு அனுப்பப் படுவதாக நடிகர் விஷ்ணு விஷால் எச்சரித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் ஹீரோவானவர், விஷ்ணு விஷால்.

தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்தார்.

திடீர் விவாகரத்து

திடீர் விவாகரத்து

சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர், பிரபல இயக்குனரும் நடிகருமான நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

ஜுவாலா கட்டா

ஜுவாலா கட்டா

இந்நிலையில், விஷ்ணு விஷாலும் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் எஃப்ஐஆர் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

எச்சரிக்கை மெசேஜ்

எச்சரிக்கை மெசேஜ்

இதற்கிடையே, அவர் பெயரில் புதுமுக நடிகைகளுக்கு பொய்யாக ஒரு மெசேஜ் அனுப்பப் பட்டுள்ளது பற்றி அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில் மதன் என்பவர் சில புதுமுக நடிகைகளுக்கு மெசேஜ் அனுப்பி யுள்ளார்.

சம்பளம் கிடைக்கும்

சம்பளம் கிடைக்கும்

அதில், ஒரு தமிழ் படத்துக்காக இந்த மெசேஜ் அனுப்பப்படுகிறது. இதற்கு பின் திறமையான குழு இருக்கிறது. புதிய தயாரிப்பாளர் தயாரிக்கிறார். அவர் உங்களை இந்தப் படத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். நல்ல சம்பளம் கிடைக்கும். விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். சில காம்ப்ரமைஸும் தேவை. நீங்கள் விரும்பினால் மேற்கொண்டு தகவல்களை அளிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

புதுமுக நடிகைகள்

புதுமுக நடிகைகள்

இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால், எச்சரிக்கையாக இருக்கும்படி புதுமுக நடிகைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் ட்விட்டரில், எனது பெயரை தவறான காரியங்களுக்காக, இதுபோன்று பயன்படுத்த முயற்சிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

கடுமையாக கண்டிக்கிறேன்

கடுமையாக கண்டிக்கிறேன்

இவர்களையும் இதுபோன்ற முட்டாள்தனங்களையும் கடுமையாக கண்டிக்கிறேன். தற்போது என் தயாரிப்பு நிறுவனம் தவிர, வேறு நிறுவனம் தயாரிக்கும் படங்கள் எதிலும் நான் நடிக்கவில்லை. இதுபற்றி விரைவில் போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X