ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஜூவாலா கட்டா.. கோலாகலமாய் நடந்த விஷ்ணு விஷால் திருமண ரிசெப்ஷன்!
சென்னை: விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவின் திருமண ரிசெப்ஷன் கோலாகலமாய் நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். தனது எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

எளிமையாக திருமணம்
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஜூவாலா கட்டாவை பதிவு திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். ஹைத்ராபாத்தில் எளிமையாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து
விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. திருமண போட்டோக்களை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரிசெப்ஷன் போட்டோஸ்
இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டாவின் திருமண வரவேற்பு போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களின் திருமண வரவேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றதாக தெரிகிறது.

மெரூன் நிற உடை
இதில் ஹாலிவுட் நடிகையை போல் உடையணிந்து உள்ளார் ஜூவாலா கட்டா. மெரூன் நிற லாங் ஸ்கர்ட் லூப் வைத்த ஜாக்கெட் அணிந்துள்ள ஜூவாலா காட்டா பின்னால் அட்டாச் செய்யப்பட்ட துப்பட்டாவை அணிந்துள்ளார்.

அடையாளமே தெரியல
மேலும் உடை நிறத்திற்கு ஹேர் கலரிங் செய்துள்ளார். மேலும் ஃபுல் மேக்கப்பில் அடையாளம் தெரியாதப்படி உள்ளார் ஜூவாலா கட்டா. இதேபோல் விஷ்ணு விஷாலும் பிளாக் அன்ட் பிளாக் உடையில் செம ஹேண்ட்சமாக உள்ளார்.
Recommended Video

ஆட்டம் பாட்டத்துடன்..
இந்த ரிசெப்ஷனல் இருவரின் உறவினர்களும் பங்கேற்றனர். ஆட்டம் பாட்டம் என ரிசெப்ஷன் களைக்கட்டியுள்ளது. இதில் நடிகர் விஷ்ணு விஷால் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவின் ரிசெப்ஷன் போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











