ஸ்ஸப்பா.. பிரியருதே இல்ல போல.. டூடூடூடூ.. விவாகரத்தான நடிகரை ஒட்டி உரசி.. தீயாய் பரவும் வீடியோ!

Recommended Video

Vishnu Vishal Marry his Girlfriend? | jwala Gutta | FIR

சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலும் விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் ஒட்டி உரசி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால் சினிமாவின் மீதிருந்த ஆர்வத்தில் விளையாட்டை உதறிவிட்டு சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். வெண்ணில கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஷ்ணு விஷால்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. முதல் படமே பெரும் வரவேற்பை பெற அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் விஷ்ணு விஷால்.

வரவேற்பு

வரவேற்பு

பலே பாண்டியா, துரோகி, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கதாநாயகன், இன்று நேற்று நாளை, ராட்சசன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார் விஷ்ணு விஷால். அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது.

விருதுகளை குவித்தது

விருதுகளை குவித்தது

நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்ததே இதற்கு காரணம். இதனால் விஷ்ணு விஷால் படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற பெயரை பெற்றார். அதற்கேற்றார் போலவே அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் பெரும் ஹிட்டானது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விருதுகளை குவித்தது இந்தப் படம்.

எஃப்ஐஆர் டீசர்

எஃப்ஐஆர் டீசர்

தற்போது ஜகஜால கில்லாடி மற்றும் எஃப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். எஃப்ஐஆர் படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. இதனை நடிகர்கள் ராணா, சுதீப், நிவின் பாலி மற்றும காஜல் அகர்வால் ஆகியோர் வெளியிட்டனர். எஃப்ஐஆர் படத்தின் டீசர் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

டூ டூ டூ...

டூ டூ டூ...

இந்நிலையில் இந்த டீசர் விரைவில் 2 மில்லியன் வியூஸை தொடப்போவதாக கூறி வீடியோ வெளியிட்டார் விஷ்ணு விஷால், அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கே வந்த பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா டூ டூ டூ எனக் கூறிக்கொண்டே இரண்டு விரல்களை காண்பித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நெருக்கம்

நெருக்கம்

விஷ்ணு விஷால் கடந்த 2018ஆம் ஆண்டுதான் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவுடன் நெருங்கி பழகி வருகிறார். இருவரும் அடிக்கடி வெளியில் சந்திக்கும் போட்டோக்களும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரிவதே இல்லை..

விஷ்ணு விஷாலுக்கும் ஜுவாலா கட்டாவுக்கும் இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் இருவரும் ஒன்றாக பேட்மிண்டன் விளையாடும் போட்டோ வெளியான நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் பிரிவதே இல்லை போல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X