மீனு டீச்சருடன் அப்படிப் போடும் விஷ்ணு விஷால்.. விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தும் ஓடும் கட்டா குஸ்தி 2

மதுரை: ஒரு படத்தின் வெற்றியை சமூக வலைதள ட்ரோல்கள் தீர்மானிக்குமா? இல்லை ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து கொடுக்கும் ஆதரவுதான் இறுதி முடிவை தீர்மானிக்குமா? என்ற கேள்விக்கு தற்போது 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் பதிலாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்த இந்த திரைப்படம், அவற்றையெல்லாம் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் வெற்றிப் பாதையில் பயணித்து வருவது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம், குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகம் போலவே இந்தப் படத்திலும் குடும்ப உறவுகள், நகைச்சுவை, உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் குஸ்தி பின்னணி ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளதாக தியேட்டர்களில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

Vishnu Vishal And MOKKSHA Dance For Ghilli Movie Song At Theatre Gatta Kushthi 2 Promotions Video

அப்படிப் போடு: படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விஷ்ணு விஷால் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது படத்தில் மீனாட்சி டீச்சராக நடித்துள்ள நடிகை மோக்‌ஷாவும் உடன் சென்றிருந்தார். குழந்தைகள் அதிகமாக வந்திருந்த மதுரையில் உள்ள வெற்றி திரையரங்கில், ரசிகர்களுடன் இணைந்து இருவரும் விஜய் - த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'அப்படிப் போடு' பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த விமர்சகர் பிரசாந்த் ரங்க்சாமி தனது எக்ஸ் தளத்தில் படத்தின் வெற்றிக்கு காரணம் விஜய் தான் என்று பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் இணையவாசி ஒருவர் விஜய் ரசிகர்கள் படத்தை கொதற வேண்டும் என்று ரவுண்டு கட்டினாலும், அது குறித்து எல்லாம் கவலைப்படாமல் படத்தின் வெற்றியை அனுபவதிக் கொண்டாடுகிறார் விஷ்ணு விஷால் என்ற பதிவைப் பகிர்ந்துள்ளார்.

ரியாக்‌ஷன்கள்: இந்த பாடல் 'கட்டா குஸ்தி 2' படத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்தக் காட்சியை படத்தில் பயன்படுத்திய விதம் குறித்து சமூக வலைதளங்களில் தனி விவாதமே ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவத்தை மறைமுகமாக ட்ரோல் செய்யும் வகையில்தான் இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படக்குழு இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இந்த விவாதம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Vishnu Vishal And MOKKSHA Dance For Ghilli Movie Song At Theatre Gatta Kushthi 2 Promotions Video

இதுமட்டுமல்லாமல், படம் வெளியாகும் முன்பே புரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால், 'விஜய்' என்று மட்டும் குறிப்பிட்டார். 'தளபதி விஜய்' ' முதலமைச்சர் விஜய்' என்று குறிப்பிடவில்லை என்பதையும் சில விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாற்றினர். அதனைத் தொடர்ந்து படத்திற்கு எதிராக பல்வேறு நெகட்டிவ் பதிவுகள், ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தன.

ஆனால், அந்த எதிர்மறை பிரச்சாரங்கள் அனைத்தையும் மீறி 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் தியேட்டர்களுக்கு வருவதுதான் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக விநியோக வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X