செம.. ராம்குமாரிடம் ஸ்க்ரிப்ட் ரெடியா என கேட்ட விஷ்ணு விஷால்.. ராட்சசன் 2 ரெடியாகுது போலயே?

சென்னை: ராட்சசன் படத்தின் 2ம் பாகம் உருவாகுவது குறித்து ட்விட்டரில், விஷ்ணு விஷாலும், இயக்குநர் ராம்குமாரும் உரையாடி உள்ளனர்.

Recommended Video

'அவனுக்கு வலின்னா என்னன்னு தெரியாது'.. நடுங்க வைக்கும் 'ராட்சசன்'! விமர்சனம்- வீடியோ

2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ்காந்த், 'நான்' சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான த்ரில்லர் படம் ராட்சசன்.

இந்த படத்திற்கு IMDB சமீபத்தில் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம், இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்களை எழுப்பி இருக்கிறது.

சீட் எட்ஜ் த்ரில்லர்

சீட் எட்ஜ் த்ரில்லர்

பல திரைப்படங்களை சீட் எட்ஜ் த்ரில்லர் என விளம்பரப்படுத்துவார்கள், ஆனால், படத்தை பார்த்தால், சீட் கடைசியில் ரசிகர்கள் தூக்கம் போட்டு தூங்கிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், உண்மையிலேயே ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு சீட் எட்ஜ் த்ரில்லராக வந்த படம் ராட்சசன் தான்.

முதலிடம்

முதலிடம்

இந்தியளவில் இதுவரை வந்த படங்களில் ராட்சசன் படத்திற்கு 3வது இடத்தையும், தமிழில் வெளியான படங்களில் ராட்சசன் படத்திற்கு முதல் இடத்தையும் கொடுத்து மிகப்பெரிய அங்கீகாரத்தை சமீபத்தில் IMDB எனும் படங்களை ரேட் செய்யும் நிறுவனம் கொடுத்து இருந்தது. ராட்சசன் படத்திற்கு கிடைத்த இந்த கெளரவத்தை பலரும் பாராட்டி இருந்தனர்.

சைக்கோ படம்

சைக்கோ படம்

சைக்கோ வகையறா படங்களில் உலகளவில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. வில்லன் யார் என்றே தெரியாமல், சஸ்பென்ஸ் வைப்பதும், அவன் ஏன் இதனை செய்கிறான். அவன் ஏன் சைக்கோ ஆனான். சிறு வயதில் அவனை பாதித்த விஷயம் என்ன? என்ற பிளாஷ்பேக்குடன் தான் பெரும்பாலும் சைக்கோ படங்கள் வெளியாகும், அதே டெம்பிளேட்டில் அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்திருந்தது ராட்சசன் என்பது குறிப்பிடத்தக்கது.

ராட்சசன் 2

ராட்சசன் 2

இப்படியொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை ஏன் பண்ணக் கூடாது என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதனை பார்த்த நடிகர் விஷ்ணு விஷால்? ராட்சசன் படத்தின் இயக்குநரான ராம்குமாரிடம் என்ன சார் ஸ்க்ரிப்ட் ரெடியா என கேள்வி எழுப்பி உள்ளார்.

ராம்குமார் பதில்

ராம்குமார் பதில்

ட்விட்டரில் திடீரென விஷ்ணு விஷால் நடத்திய இந்த சுவாரஸ்யமான உரையாடலுக்கு பதில் அளித்த அந்த படத்தின் இயக்குநர் ராம்குமார், "போய்கிட்டு இருக்கு" என பதில் அளித்துள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. முண்டாசுப்பட்டி படத்திற்கு ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார், அடுத்த படத்தை இன்னமும் துவங்கவில்லை.

தனுஷ் படம்

தனுஷ் படம்

ராட்சசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் உடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்து இருந்தார். அந்த படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் ராம்குமார் ஈடுபட்டு இருந்தார். ஏகப்பட்ட படங்களில் பிசியாகி உள்ள தனுஷ், இன்னமும் சில படங்களை முடித்த பிறகு தான் ராம்குமாருடன் இணைவார் என தெரிகிறது. இந்த நிலையில், ராட்சசன் 2 படத்தை அதற்கு முன்னதாக ராம்குமார் இயக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X