வனிதா விஜயகுமார், விஷ்ணு விஷால் தம்பி படங்களின் வசூல் எவ்வளவு?.. ஜூலை மாத பாக்ஸ் ஆபீஸ் கிங் இந்த படமா?

சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்றுள்ள தமிழ் படம் என்றால் அது ஜூலை 4ம் தேதி சரத்குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான 3பிஹெச்கே படம் தான். அந்த படத்தைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த பறந்து போ படம் உள்ளது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ், கடந்த வாரம் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நடித்த ஓஹோ எந்தன் பேபி மற்றும் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா தயாரிக்க வனிதா, ராபர்ட் மாஸ்டர் நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் க்ளின் வாஷ் அவுட் ஆகியுள்ளன.

வாரிசுகளை பிரபலங்கள் களமிறக்கினாலும், அவர்கள் உண்மையாகவே திறமையானவர்கள் என்பதை மக்கள் நினைக்கவில்லை என்பதை மட்டுமே இந்த வசூல் நிலவரம் காட்டுவதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

Vishnu Vishal brother and Vanitha Vijayakumar adult comedy movies are flopped at the Box office
Photo Credit:

கடந்த வாரம் வெளியான படங்களில் அதிகமாக கல்லா கட்டிய படம் எது? என்பது குறித்தும் ஓஹோ எந்தன் பேபி, மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் உள்ளிட்ட படங்களின் வசூல் குறித்தும் விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க.

3 பிஹெச்கே தான் கெத்து: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை போல 3 பிஹெச்கே மற்றும் பறந்து போ படங்கள் வசூலை வாரிக் குவிக்கும் என ஓவர் பில்டப் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 4ம் தேதி வெளியான இந்த படங்களில் 3பிஹெகே திரைப்படம் 10 கோடி ரூபாய் வரை வசூலை நெருங்கி வருவதாகவும் கடந்த வாரம் வெளியான படங்களை விட இந்த படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி நடித்த பறந்து போ திரைப்படம் 10 நாட்களில் 5.83 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீனிக்ஸ் வீழான் திரைப்படம் 10 நாட்களில் 2.13 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.

ஓஹோ எந்தன் பேபி வசூல்: விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்து அமீர்கானை வைத்து எல்லாம் புரமோஷன் செய்த ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் முதல் நாளில் 8 லட்சம் ரூபாயும், 2வது நாளில் 17 லட்சம் ரூபாயும் ஞாயிற்றுக்கிழமை 22 லட்சம் ரூபாய் என ஒட்டுமொத்தமாக 47 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து டிசாஸ்டர் ஆகியிருக்கிறது . காமெடி நடிகர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை மக்கள் பெரிதாக சீண்டவே இல்லை. விஜய் சேதுபதி மகனுக்கு கிடைத்த வரவேற்பு கூட விஷ்ணு விஷால் தம்பிக்கு கிடைக்கவில்லை.

Vishnu Vishal brother and Vanitha Vijayakumar adult comedy movies are flopped at the Box office
Photo Credit:

வனிதா விஜயகுமார் படம் என்ன ஆச்சு?: வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர், கிரண் நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ஏகப்பட்ட கில்மா காட்சிகள் இருந்தாலும், அந்த படத்தையும் ரசிகர்கள் பெரிதாக கண்டுக்கொள்ளவே இல்லை. தனது பேட்டிகளில் பல சர்ச்சைகளை கிளப்பி படத்தை ஓட வைக்க வனிதா எடுத்த முயற்சிகள் எல்லாமே படுதோல்வி தான் என்கின்றனர். 3 நாட்களில் மொத்தமாகவே 4 முதல் 5லட்சம் வரை தான் வசூல் வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Vishnu Vishal brother and Vanitha Vijayakumar adult comedy movies are flopped at the Box office
Photo Credit:

சூப்பர்மேன் தான் பாக்ஸ் ஆபீஸ் கிங்: கடந்த வாரம் வெளியான படங்களில் இந்தியளவில் அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்து அசால்ட்டு காட்டியிருக்கிறார் சூப்பர்மேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் வெளியான படங்களை விட சூப்பர் மேன் வசூல் அதிகம் என்பது தான் இதில் கோடிட்டு பார்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு இந்த வாரம் வெளியாகும் படங்களாவது கை கொடுக்குமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X