புத்தாண்டில் புது மாற்றம்.. புது முடிவு.. விஷ்ணு விஷால் புது திட்டம்

Recommended Video

Vishnu Vishal jwala gutta got hitched up | New Year 2020

சென்னை : புத்தாண்டு பிறந்ததை அடுத்து தனது படதயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை மாற்றி அதனை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கிறார் விஷ்ணு விஷால். இப்போதிலிருந்து எங்கள் கவனம் முழுவதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மக்களை ஆச்சரியபடுத்துவதே என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு முன் ராட்சசன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் நடித்து இருந்தார் அந்த படம் நூறு நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடி அனைவருது பாராட்டையும் பெற்றது.

Vishnu Vishal Changed the company logo.

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் சினிமாவில் அறிமுகமான விஷ்ணு விஷால். அதற்கு பிறகு சில ஏற்ற தாழ்வுகளை கடந்து தற்போது நல்ல நடிகர் என்று பெயர் எடுத்துள்ளார். முண்டாசுப்பட்டி , ஜீவா மற்றும் இன்று நேற்று நாளை என வரிசையாக ஹாட்ரிக் ஹிட் அடித்து விஷ்ணு விஷாலின் மார்க்கெட் எகிறியது.

இதையடுத்து, வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்திருந்தார் அந்த படம் நகைச்சுவை படமாகவும் அமைந்து வசூலை வாரிக்குவித்தது. அந்த படத்தில் தான் தயாரிப்பாளராக களம் இறங்கினார் விஷ்ணு விஷால் .

தயாரித்த முதல் படமே நல்ல வெற்றியை பதிவு செய்தது, அதன் பின் அவர் தயாரித்த படம் கதாநாயகன் அந்த படம் அவ்வளவாக எடுபடவில்லை தோல்வியை தழுவியது. அதைத்தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை தயாரித்தார் விஷ்ணு விஷால், சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வியாபார ரீதியில் தோல்வி அடைந்தது .

விஷ்ணு விஷால் ஒரு கதையுள்ள படம் அடுத்ததாக ஒரு கமர்சியல் படம் என்ற ஃபார்முலாவிலே நடித்து வருகிறார். தான் நடிக்கும் கமர்சியல் படங்களை தயாரித்து விடுகிறார். விஷ்ணு விஷால் அடுத்ததாக ஜகச்ஜால கில்லாடி மற்றும் ஃஎப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார். ஃஎப்.ஐ.ஆர் படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Vishnu Vishal Changed the company logo.

புத்தாண்டை ஒட்டி தனது படதயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை மாற்றி அதனை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கிறார் விஷ்ணு. அதில் இப்போதிலிருந்து எங்கள் கவனம் முழுவதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மக்களை ஆச்சரியபடுத்துவதே என்று கூறப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது விஷ்ணு தன் படங்களை தவிர்த்து வேறு சில படங்களையும் தயாரிக்க இருக்கிறார் என்று தெரிகிறது.இனி விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸிடம் இருந்து பல நல்ல படங்களை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X