பிரிந்திருப்பதால் வாடும் காதலி.. சோஷியல் டிஸ்டன்சிங் ரொம்ப முக்கியம்.. ஆறுதல் கூறும் பிரபல நடிகர்!

சென்னை பிரிந்து இருப்பதால் வாடும் காதலியை விவாகரத்தான பிரபல நடிகர் ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியை கடந்த 2018ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு காரணம் பிரபலம் ஒருவருடன் விஷ்ணு விஷாலுக்கு ஏற்பட்ட நெருக்கமே காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில்தால் நடிகர் விஷ்ணு விஷாலும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் மேலாக நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியானது.

மறுத்த நடிகர்

மறுத்த நடிகர்

இருவரும் இரவு விருந்துகளில் பங்கேற்கும் போட்டோக்களும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் அவ்வப்போது வெளியானது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் அதனை மறுத்து வந்தார்.

பிரிவதே இல்லை

பிரிவதே இல்லை

இருப்பினும் தனது எஃப்ஐஆர் படத்தின் புரமோஷன் தொடர்பாக இருவரும் இணைந்து பேசும் வீடியோக்கள் வெளியானது. வைரலான இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் பிரிவதே இல்லை போல என எப்போதும் ஒன்றாகவே இருக்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் கமென்ட் பதிவிட்டு வந்தனர்.

மிஸ்ஸிங் மை பூ..

மிஸ்ஸிங் மை பூ..

ஆனால் அதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் விஷ்ணு விஷாலுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோவை போட்டு மிஸ்ஸிங் மை பூ என சோகமாக இருக்கும் ஈமோஜிகளை பதிவிட்டிருந்தார் ஜுவாலா கட்டா.

நீங்கள்தான் காரணமா?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இருவரும் சந்தித்துக்கொள்ள முடியாத நிலை உள்ளது என தெரிகிறது. இந்நிலையில் ஜுவாலா கட்டாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் விஷ்ணு விஷால் அவரது மனைவியை விவாகரத்து செய்ய நீங்கள்தான் காரணமா என கேட்டு வந்தனர்.

சோஷியல் டிஸ்டன்சிங்

இந்நிலையில் ஜுவாலா கட்டாவின் பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் விஷ்ணு விஷால். மேலும், இட்ஸ் ஓகே.. இப்போதைக்கு சோஷியல் டிஸ்டன்சிங் ரொம்ப முக்கியம்.. எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அட பாவி இவளுக்காகதான் உன் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணிட்டியா என கேட்டுள்ளனர்.

கிளுகிளுப்பு கேக்குதா?

இன்னும் சிலர் என்ன புரோ அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகிட்டிங்க போல என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். ஓ ரணகளத்துலேயும் கிளுகிளுப்பு கேக்குதா உங்களுக்கு என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். நிஜமாவே இந்த சீனா பொண்ண தான் கல்யாணம் பண்ணப்போரியா தலைவா..!!?? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X