Vishnu Vishal: அயலான் ஹீரோவை தொடர்ந்து லால் சலாம் ஹீரோ பண்ண மாஸான செயல்.. பாராட்டும் ரசிகர்கள்!
சென்னை: சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் கொடுத்திருந்தனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் வழங்கினார். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் உதயநிதியை நேரில் சந்தித்து 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்நிலையில், லால் சலாம் படத்தின் நாயகனும் நிதியுதவி அளித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி தத்தளித்த நிலையில், தமிழ்நாடு அரசு அவரையும் அமீர்கானையும் போட் மூலம் மீட்டது. அதன் பின்னர் அவர்கள் இருவரையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல நடிகர் அஜித் வாகன உதவி செய்தார் என விஷ்ணு விஷால் பதிவிட்டு இருந்தார்.

அயலான் ஹீரோ நிவாரணம்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படம் ஏலியன் சப்ஜெக்டாக உருவாகி உள்ளது. அந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாயை சிவகார்த்திகேயன் உதயநிதியை நேரில் சந்தித்து வழங்கினார்.
லால் சலாம் நாயகன்: இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு அயலான் படத்துடன் போட்டியாக விஷ்ணு விஷாலின் லால் சலாம் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஷ்ணு விஷாலும் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை தற்போது உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வழங்கி உள்ளார்.
அடுத்து தனுஷ் வருவாரா?: "மிக்ஜாம் புயல் - கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைப்பட நடிகர் - சகோதரர் @TheVishnuVishal, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்." என உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் ட்வீட் போட்டுள்ளார். அடுத்து கேப்டன் மில்லர் தனுஷ் வந்து காசு கொடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











