ரியல் ராட்சசனாக மாறிய விஷ்ணு விஷால்.. எஃப்.ஐ.ஆர் செகண்ட் லுக் வேற லெவல்.. விரைவில் டீசர் ரிலீஸ்!
சென்னை: ராட்சசன் படத்திற்கு பிறகு தனது ரசிகர்களுக்கு அடுத்த ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என விஷ்ணு விஷால் கடுமையாக உழைத்து வருகிறார்.
சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் எஃப்.ஐ.ஆர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாகிறது.

தயாரிப்பு நிறுவனம்
தயாரிப்பாளர்கள் தனக்கு சரியாக சம்பளம் தராமல் ஏமாற்றினர் என ஓப்பனாக கூறிய விஷ்ணு விஷால், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளர் ஆகியுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் விஷ்ணு நடிப்பில் எஃப்.ஐ.ஆர் படம் உருவாகி வருகிறது.

அது என்ன எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர் என்ற தலைப்புக்கு விரிவாக்கமாக ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் என்ற வித்தியாசமான டைட்டிலுடன் விஷ்ணு விஷாலின் புதிய படம் ரெடியாகி வருகிறது. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார்.

ராட்சசன் எதிர்பார்ப்பு
ராட்சசன் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ராட்சசன் அளவுக்கு தரமான ஒரு படத்தை ரசிகர்கள் தன்னிடம் இருந்து எதிர்பார்ப்பதை அறிந்த விஷ்ணு விஷால், எஃப்.ஐ.ஆர் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
மாஸ் ஃபர்ஸ்ட் லுக்
எஃப்.ஐ.ஆர் படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது. முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டு நெருப்பு கனல் தெறிக்கும் கண்களுடன் விஷ்ணு விஷால் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
செகண்ட் லுக்
இந்தியாவே எரிந்துக் கொண்டிருக்கும் பேக் ரவுண்டில் சிக்ஸ் பேக்குடன் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் விஷ்ணு விஷாலின் புகைப்படம் கதையின் ஆழத்தை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் வெளியாகிறது என்ற அறிவிப்பையும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
கடும் பயிற்சி
எஃப்.ஐ.ஆர் செகண்ட் லுக் குறித்த ரசிகர்களின் கருத்துக்களை படித்துக் கொண்டிருக்கிறேன். வெற்றிகரமாக எனது சனிக்கிழமை கிரவுண்ட் பயிற்சியை முடித்து விட்டேன் என சிக்ஸ் பேக் தெரியும்படி விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











