கோடிகளை இழந்த ராட்சசன் பட நடிகர்.. படமும் ட்ராப்.. மாட்டிக்கொண்ட கனா பட இயக்குநர்!

சென்னை: முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால், இவர் நடிகராக மட்டும் அல்லாமல், தான் நடிக்கும் படங்களை அவரே தயாரித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான கட்டா குஷ்தி படத்திற்கு பிறகு 2 படங்களில் நடித்து வந்தார். அப்படத்தின் அறிவிப்பும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தன. ஆனால், தற்போது அந்த படத்தால் விஷ்ணு விஷால் பல கோடிகளை இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பட தயாரிப்பு பணியை நிறுத்தி விட்டாராம்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஷ்ணு விஷால், இதைத்தொடர்ந்து அவர் நடித்த முண்டாசுப்பட்டி, ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன, கட்டா குஸ்தி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ராட்சசன் படத்தின் வெற்றி இவரை முன்னணி ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து மோகன் தாஸ், கவரிமான் பரம்பரை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

vishnu-vishal-drops-mohandas-kavariman-paramparai-movie

தயாரிப்பு: இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வந்த மோகன்தாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் அனைத்தும் வெறித்தனமாக இருந்தன. ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான மோகன்தாஸ் செகண்ட் லுக் டீசர் கவனத்தையும் ஈர்த்தது. தனது சொந்த தயாரிப்புலேயே படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார் விஷ்ணு விஷால். அதேபோன்று மோகன் தாஸ் படங்களை தயாரித்தார். ஆனால், முதற்கட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே படத்தை பாதியிலே நிறுத்திவிட்டாராம். இப்படத்திற்கு இதுவரை ரூ.15 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பணம் தான் பிரச்னையா என்ற காரணம் தெரியவில்லை.

இயக்குநருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் தான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அறிமுக இயக்குநர் ராதாகிருஷ்ணன் இயக்கும் கவரிமான் பரம்பரை என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க தொடங்கினார். இப்படமும் அவரது சாெந்த தயாரிப்பில் தான் உருவானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நின்று விட்டதாம். இப்படத்திற்கு விஷ்ணு விஷால் 10 கோடி செலவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் ரூ.25 கோடி போட்டு படம் எடுத்து படப்பிடிப்பை நிறுத்துவதற்குத்தானா என சினிமா விமர்சகர்கள் கிண்டலடித்துள்ளார்கள்.

சிக்கிய அருண்ராஜா காமராஜா: இது ஒரு பக்கம் இருந்தாலும் விஷ்ணு விஷாலிடம் கனா பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ஒரு கதையை கூறியுள்ளார். இக்கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்துவிட்டதால் அவரே தயாரிப்பதாக தெரிவித்திருக்கிறாராம். ஆனால், படம் தொடங்கிய பாடு இல்லையாம். அருண்ராஜா காமராஜ் பொறுமை இழந்து விஷ்ணு விஷாலிடம் நிதானமாக கேட்டுள்ளாராம். ரூ.25 கோடி போட்டு படம் ட்ராப் ஆன விரக்தியில் இருந்த விஷ்ணு விஷால், தற்போது வேல்ஸ் பிலிம்ஸை நாடியுள்ளாராம். வேல்ஸ் பிலிம்ஸ் மூக்குத்தி அம்மன் படத்தை 100 கோடி செலவில் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு புராண படம் ஒன்று என அடுக்கடுக்கான லிஸ்ட் உள்ளது. அருண்ராஜா காமராஜ் படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தயாரிப்பது யார் என்பது தான் சிக்கல்,விரைவில் நல்ல அறிவிப்புக்காக கனா பட இயக்குநர் காத்திருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X