காதலிக்கு பிறந்தநாள்.. நள்ளிரவில் மோதிரத்தை போட்டு நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகர் விஷ்ணு விஷால்!

சென்னை: தனது காதலியான ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஷ்ணு விஷால், அவருக்கு மோதிரத்தை அணிவித்து நிச்சயதார்த்தை முடித்துள்ளார்.

Recommended Video

காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

ஏற்கனவே திருமணமான விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். விளையாட்டு வீராங்கணையான ஜூவாலா கட்டாவுடன் ஏற்பட்ட காதலால் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்.

வெளிச்சத்திற்கு வந்த காதல்

வெளிச்சத்திற்கு வந்த காதல்

விவாகரத்து வரை வெளியில் தெரியாமல் இருந்த இவர்களின் உறவு, அதன் பிறகு மெல்ல வெளிச்சத்திற்கு வந்தது. இருவரும் நைட் பார்ட்டிகளில் ஒன்றாக பங்கேற்றது, நெருக்கமாக இருப்பது, கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி இவர்களின் காதலை உறுதிப்படுத்தியது.

மிஸ் செய்த காதலி

மிஸ் செய்த காதலி

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தங்களின் காதலை உறுதிப்படுத்தினர். விரைவில் திருமண்ம் செய்யவுள்ளதாகவும் அறிவித்தனர். லாக்டவுன் நேரத்தில் தன்னை ரொம்பவே மிஸ் செய்வதாக கூறிய ஜூவாலா கட்டாவை, இந்த நேரத்தில் சோஷியல் டிஸ்டன்ஸிங் ரொம்ப முக்கியம் என ஆறுதல் கூறினார் விஷ்ணு விஷால்.

பிரிவால் கவலை

பிரிவால் கவலை

அதனை தொடர்ந்து தங்களின் மாலத்தீவு ஜாலி ட்ரிப் போட்டோக்களை பகிர்ந்து விஷ்ணு விஷாலும் காதலியை பிரிந்திருப்பது குறித்து கவலைப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

நள்ளிரவில் மோதிரம்

நள்ளிரவில் மோதிரம்

அப்போது நள்ளிரவில் கேக் செய்து கொடுத்து சர்ப்ரைஸ் கிஃப்ட் அளித்தார் ஜூவாலா கட்டா. இந்நிலையில் இன்று ஜூவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்ட அவருக்கு நள்ளிரவில் மோதிரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

அதோடு மட்டுமின்றி காதலியின் விரலில் மோதிரத்தை அணிவித்து நிச்சயதார்த்தத்தையும் முடித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். மோதிரத்தை ஏற்பாடு செய்தவருக்கு நன்றி தெரிவித்துள்ள விஷ்ணு விஷால், #EngagementRingJugaad என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

போட்டோக்கள் பரிசு

போட்டோக்கள் பரிசு

விஷ்ணு விஷால் தனது காதலியின் கையைப் பற்றியப்படியும் அவருக்கு மோதிரத்தை அணிவித்ததையும் மற்றும் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஆரம்பிக்கலாம்

ஆரம்பிக்கலாம்

மேலும் பிறந்த நாள் வாழ்த்துகள் ஜூவாலா கட்டா..
வாழ்க்கைக்கு புதிய தொடக்கம்.. பாஸிட்டிவாக இருப்போம்.. நமக்கும், ஆரியனுக்கும், எங்கள் குடும்பங்களுக்கும், நண்பர்களுக்கும், சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி செயல்படுவோம் .. உங்கள் எல்லா அன்பும் ஆசீர்வாதமும் தேவை தோழர்களே.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X