Just In
- 8 hrs ago
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- 9 hrs ago
இந்தியில் ரீமேக் ஆகும் அருவி... கதாநாயகி யார் தெரியுமா?
- 9 hrs ago
மணப்பெண் கோலத்தில் பரதேசி ஹீரோயின்... தேவதை மாதிரியே இருக்காங்க!
- 9 hrs ago
கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்யப் போகிறாரா தனுஷ் பட நடிகை? பரபரப்பு தகவல்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 07.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது…
- News
காங்கிரசுக்கு 25 தொகுதிகள்?...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அவங்க வரலயா? மாலத்தீவில் ஜாலி பண்ணும் பிரபல தமிழ் நடிகர்.. காதலி குறித்து விசாரிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் மாலத்தீவில் ஓய்வை கழித்து வருவதை பார்த்த நெட்டிசன்கள் அவரது காதலியான ஜூவாலா கட்டா எங்கே என கேட்டு வருகின்றனர்.
பிரபல நடிகரான விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
அவரது நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ராட்சன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏராளமான விருதுகளையும் குவித்தது.

கைவசம் படங்கள்
கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படம் ரிலீஸ் ஆனது. அதன்பிறகு அவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஜூவாலா கட்டாவுடன் காதல்
திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தைக்கான அப்பாவான விஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினியை கடந்த 2018ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு பேட்மிண்டன் வீராங்கணையான ஜூவாலா கட்டாவுடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்து வருகிறார் விஷ்ணு விஷால்.

மாலத்தீவில் ஜாலி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூவாலா கட்டாவின் பிறந்தநாளில் நள்ளிரவில் மோதிரம் மாற்றிக் கொண்டு இருவரும் தங்களின் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் மாலத்தீவில் ஓய்வை கழித்து வரும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

விதவிதமான போட்டோக்கள்
வழக்கமாக நடிகைகள் மாலத்தீவுக்கு செல்வதும், பீச் ஹவுஸிலும் கடற்கரையிலும் பிகினியில் சன்பாத் எடுப்பதும், அந்த போட்டோக்கைள தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்வதும் வாடிக்கை. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும் மாலத்தீவில் இருந்து விதவிதமான போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

உங்கள் காதலி எங்கே?
இதில் மேலே சட்டை இல்லாமல் விஷ்ணு விஷால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், எங்கே உங்களின் சிக்ஸ் பேக்கை காணவில்லை என்று கேட்டு கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் நீங்கள் மட்டும் தனியாவா போயிருக்கீங்க? உங்கள் காதலியான ஜூவாலா கட்டா வரவில்லையா என்றும் கேட்டு வருகின்றனர்.